இப்படிலாம் மோசடி நடக்குது... இனி இந்த மாதிரி கால், மெசேஜ் வந்தா தொடாதீங்க!

மோசடி செய்பவர்கள் போலி ஆர்.பி.ஐ அழைப்புகள் மற்றும் எஸ்.பி.ஐ வெகுமதி சலுகைகளுடன் மிகவும் சாமர்த்தியசாலிகளாகி செயல்படுகின்றனர். உங்கள் தகவல்கள் தவறான கைகளில் சிக்காமல் எப்படி பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மோசடி செய்பவர்கள் போலி ஆர்.பி.ஐ அழைப்புகள் மற்றும் எஸ்.பி.ஐ வெகுமதி சலுகைகளுடன் மிகவும் சாமர்த்தியசாலிகளாகி செயல்படுகின்றனர். உங்கள் தகவல்கள் தவறான கைகளில் சிக்காமல் எப்படி பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
cyber crime

சமீப வாரங்களாக, 'ஆர்.பி.ஐ குரல் அழைப்பு' மற்றும் 'எஸ்.பி.ஐ வெகுமதிகள்' என இரண்டு வகையான நிதி மோசடிகள் இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்பு பிரிவு, இந்த இரண்டு மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. இந்த மோசடிகளை புரிந்துகொள்வதற்கும், உங்களைப் பாதுகாத்து கொள்வதற்கும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று இதில் காணலாம்.

ஆர்.பி.ஐ குரல் அழைப்பு மோசடி என்றால் என்ன?

Advertisment

மோசடி செய்பவர்கள் ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) அதிகாரிகளாக தானியங்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்கின்றனர். பொதுமக்களுக்கு ஆர்.பி.ஐ-லிருந்து அழைப்பு வந்ததாகக் கூறி பதிவு செய்யப்பட்ட குரல் செய்தி ஒன்று வருகிறது. அதில் அவர்களின் வங்கிக் கணக்கு அல்லது பான் கார்டு உடனடியாக  முடக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறது.

முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்:

தனிப்பட்ட விவரங்களை கேட்கும் தானியங்கு அழைப்புகள்.

கணக்கு முடக்கம் அல்லது சட்ட நடவடிக்கை அச்சுறுத்தல்கள்.

ஒரு எண்ணை அழுத்தவோ அல்லது வேறு எண்ணிற்கு திரும்ப அழைக்கவோ கோரிக்கைகள்.

உண்மைத் தன்மை: தனிநபர்களுக்கு கணக்கு சரிபார்ப்புக்காகவோ அல்லது கணக்கு முடக்க அச்சுறுத்தலுக்காகவோ இத்தகைய அழைப்புகளை ஆர்.பி.ஐ செய்வதில்லை; இவை போலியானவை.

எஸ்.பி.ஐ வெகுமதி மோசடி என்றால் என்ன?

மற்றொரு மோசடி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ)-லிருந்து வந்ததாக தோன்றும் போலி செய்திகளை உள்ளடக்கியது. இந்த செய்திகள், பயனர்களுக்கு உரிமை கோரப்படாத 'எஸ்.பி.ஐ வெகுமதி புள்ளிகள்' இருப்பதாக கூறுகின்றன, 

மோசடி எவ்வாறு செயல்படுகிறது?

Advertisment
Advertisements

வெகுமதி புள்ளிகளை மீட்டெடுப்பதாக உறுதியளிக்கும் ஒரு செய்தி அல்லது மின்னஞ்சலை நீங்கள் பெறுவீர்கள்.

அந்த இணைப்பு எஸ்.பி.ஐ-இன் அதிகாரப்பூர்வ போர்டல் போல தோற்றமளிக்கும் ஒரு போலி வலைதளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

கணக்கு எண், ஓ.டி.பி போன்ற முக்கியமான தகவல்களை உள்ளிடுமாறு உங்களிடம் கேட்கப்படும்.

உண்மைத் தன்மை: எஸ்.பி.ஐ ஒருபோதும் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர் தகவல்களை கேட்பதில்லை. இத்தகைய இணைப்புகள் மோசடியானவை.

ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை எவ்வாறு பாதுகாப்பது?

இந்த மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பின்வருவனவற்றை மனதில் கொள்ளுங்கள்:

உங்கள் ஓ.டிபி-கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம்.

எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் சரிபார்க்கப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.

சந்தேகத்திற்கிடமான செய்தி அல்லது அழைப்பை நீங்கள் பெற்றால், வாடிக்கையாளர் சேவையை அழைப்பதன் மூலமோ அல்லது கிளையை பார்வையிடுவதன் மூலமோ உங்கள் வங்கியுடன் நேரடியாகச் சரிபார்க்கவும்.

எழுத்துப் பிழைகள் அல்லது வழக்கத்திற்கு மாறான URL-கள் இருக்கிறதா என்று பாருங்கள். அவை பெரும்பாலும் போலி வலைதளங்களின் அடையாளங்கள்.

உங்கள் தொலைபேசி மற்றும் கணினியில் அன்டி வைரஸ் மென்பொருள் ஆகியவற்றை பதிவு செய்து வைத்திருங்கள்.

மோசடி என்று சந்தேகித்தால்:

உடனடியாக உங்கள் வங்கியின் உதவி எண்ணுக்கு புகாரளிக்கவும்.

cybercrime.gov.in இல் புகார் தாக்கல் செய்யவும் அல்லது 1930 (சைபர் கிரைம் உதவி எண்) என்ற எண்ணை அழைக்கவும்.

Cyber Crime

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: