வாடிக்கையாளரை அறிவோம் (KYC updation) KYC புதுப்பிப்பு என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் மோசடிகளுக்கு உள்ளாவதாக தொடர்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில் ஆர்.பி.ஐ மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பண மோசடிகளை தடுக்கவும், இதுபோன்ற தீங்கிழைக்கும் நடைமுறைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், பொதுமக்கள் கவனமாகவும் இருக்குமாறும் ஆர்.பி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது. .
இத்தகைய மோசடிகளுக்கான செயல் முறையானது பொதுவாக வாடிக்கையாளர்களின் ஃபோன் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலம் தொடர்பு கொள்வர். இதன் மூலம் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல், வங்கி கணக்கு மற்றும் லாக்கின் விவரங்களை வழங்க சொல்வர் அல்லது அங்கீகரிக்கப்படாத அல்லது சரிபார்க்கப்படாத லிங்க் அல்லது ஆப்களை இன்ஸ்டால் செய்யக் கூறி மோசடிககளில் ஈடுபடுவர் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/business/rbi-cautions-against-kyc-updation-fraud-9141527/?tbref=hp
இதுபோன்ற மோசடிகள் எப்போதும் அவசரத்தை உருவாக்கி மோசடிகளில் ஈடுபடுவர். இப்போதே செய்ய வேண்டும், அவசரமாக செய்ய வேண்டும் இல்லை என்றால் வங்கி கணக்கி முடக்கப்படும் என்பன போன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவர். வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்லது லாக்கின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதுபோன்ற பண மோசடிகள் நடந்தால், பொதுமக்கள் உடனடியாக தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்டல் (www.cybercrime.gov.in) அல்லது சைபர் கிரைம் ஹெல்ப்லைன் (1930) மூலம் புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“