/tamil-ie/media/media_files/uploads/2018/02/NiravModi150218_0.jpeg)
NiravModi
ஆர்.சந்திரன்
பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 12,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட துணை நின்ற புரிந்துணர்வு கடிதம் (LOU - Letter of Understanding) மற்றும் அணுசரனைக் கடிதம் (LOC - Letter of Comfort) போன்ற கடன் வழிமுறைகளை உடனடியாக நிறுத்தும்படி, இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் - தனக்குக் கீழ் செயல்படும் வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால், மேற்கண்ட இருமுறைகளில் கடன் வழங்குவது, உடனடியாக இந்திய வங்கித்துறையில் முற்றிலுமாக முடிவு வருகிறது.
எனினும், உத்தரவாதம் (Guarantees) மற்றும் கடன்பெற உதவும் கடிதம் (Letter of Credit) போன்ற இதர முறைகளில் கடன் தரப்படுவதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தவில்லை. அவை வழக்கம் போல தொடரலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது.
ரிசர்வ் வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள இரு கடன் வழிமுறைகளில், முதலாவதான LOU கடிதம் என்பது, அந்த கடிதத்தைத் தரும் வங்கி கிளையின் உத்தரவாதம் அந்த கடனுக்கு உள்ளதாக கருதப்பட்டு, கடன் வழங்கப்படுகிறது. இதே வகையிலானதுதான் LOC எனப்படும் கடிதமும். அதனால், இந்த கடன்தொகைகள் வசூலாகவில்லை என்றால், கடன் தந்த வங்கிக் கிளையை விட, கடிதம் தந்த வங்கிக் கிளைதான் இதற்கு பொறுப்பு. அதுதான் உத்திரவாதம் தர வேண்டும். எனவே அதிக ரரிஸ்க் உள்ளது. எனவே, இது தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
மாறாக - மற்ற இரு விதமான கடன்களிலும், இந்த கடன்களை பரிந்துரைத்து கடிதம் வழங்கும் கிளைகள், இந்த கடன்களுக்கு பொறுப்பு அல்ல. மாறாக, பரிந்துரைக் கடிதங்களைப் பார்த்து, கடன் வழங்கும் கிளைகள்தான் நேரடிப் பொறுப்பு.
அதனால்தான், இப்போது ரிசர்வ் வங்கி முதல் இரு கடன்களையும் தடை செய்துள்ளது. மற்ற இரு கடன்கள் குறித்து அதிகம் பேசாமல் நழுவி வருகிறது. உரிய ஆய்வுகள் எதையும் செய்யாமல் கடன் வழங்கும் கிளை அதற்கு பொறுப்பு ஏற்கட்டும் என்பதுதான் காரணம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.