கோல்டு லோன் விதிகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி; வட்டி விகித முறைகளிலும் மாற்றம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள 2 முக்கியத் திருத்தங்கள், வங்கிகளின் கடன் வழங்கும் நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள 2 முக்கியத் திருத்தங்கள், வங்கிகளின் கடன் வழங்கும் நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

author-image
WebDesk
New Update
RBI rules

கோல்டு லோன் விதிகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி; வட்டி விகித முறைகளிலும் மாற்றம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள 2 முக்கியத் திருத்தங்கள், வங்கிகளின் கடன் வழங்கும் நடைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. வழக்கமாக, வணிக வங்கிகள் (SCBs), தங்கம்/வெள்ளி வாங்குவதற்காகவோ அல்லது முதல் நிலை தங்கம்/வெள்ளிப் அடகு வைத்தோ கடன் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை முன்பு நகை உற்பத்தியாளர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி மூலதனக் கடன்கள் (Working Capital Loans) வழங்க அனுமதிக்கப்பட்டது. தற்போது, ரிசர்வ் வங்கி இந்த விதிவிலக்கை மேலும் விரிவாக்கியுள்ளது.

Advertisment

ரிசர்வ் வங்கி (தங்கம், வெள்ளி அடகு மீதான கடன்) (முதல் திருத்தம்) வழிகாட்டுதல்கள், நேற்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டன. அதன்படி, தங்கம் அல்லது வெள்ளியைத் தங்கள் உற்பத்தி அல்லது தொழில்துறை செயலாக்க நடவடிக்கைகளுக்கு மூலப்பொருளாக (Raw Material) அல்லது உள்ளீடாக பயன்படுத்தும் எந்தவொரு கடனாளியின் தேவை அடிப்படையிலான பணி மூலதனக் கடனுக்கும் (Need-based working capital requirements) இந்த விதிவிலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவ்வழிகாட்டுதல்கள் கூறுவதாவது: “வணிக வங்கி அல்லது அடுக்கு 3 அல்லது 4 நகர்ப்புற கூட்டுறவு வங்கி (UCB), தங்கம் அல்லது வெள்ளியை மூலப்பொருளாகவோ அல்லது உள்ளீடாகவோ தங்கள் உற்பத்தி அல்லது தொழில்துறை செயலாக்க நடவடிக்கைகளில் பயன்படுத்துபவர்களுக்கு தேவை அடிப்படையிலான பணி மூலதன நிதியை நீட்டிக்கலாம். இதற்காக, அத்தகைய தங்கம், வெள்ளியை அடகுவைக்க ஏற்கலாம்.” எனினும், கடன் வழங்கும் வங்கி, கடனாளிகள் தங்கத்தை முதலீடு அல்லது ஊக வணிக நோக்கங்களுக்காகப் பெறவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆர்.பி.ஐ. வலியுறுத்தி உள்ளது.

கடனாளிகளுக்குப் பயனளிக்கும் வகையிலும், அதே சமயம் கடன் வழங்குபவர்களுக்குக் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் வகையிலும், ரிசர்வ் வங்கி (முன் பணங்களின் மீதான வட்டி விகிதம்) (திருத்தம்) வழிகாட்டுதல்கள், 2025-ஐ வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள விதிகளின்படி, வங்கிகள் அனைத்து மாறும் வட்டி விகித தனிநபர் கடன்கள் (வீடு, கார்) மற்றும் எம்.எஸ்.எம்.இ-களுக்கு நீட்டிக்கப்படும் கடன்களை External Benchmark இணைக்க வேண்டும். கடனாளியின் கடன் அபாய பிரீமியம் தவிர்த்து, அந்த வெளிப்புற அளவுகோலுக்கு மேலான பரவலை (Spread) வங்கிகள் தீர்மானிக்கலாம். ஆனால், அந்தப் பரவலின் அனைத்துக் கூறுகளையும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.

Advertisment
Advertisements

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், "வங்கிகள் கடனாளியின் நன்மைக்காக மற்ற பரவல் கூறுகளை (Other Spread Components) 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் குறைக்கலாம்" என்று கூறுகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, மாதாந்திரத் தவணை (EMI) அடிப்படையில் தனிநபர் கடன்களுக்கு, வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்படும் (Reset) போது, கடனாளிகள் கட்டாயமாக நிலையான விகிதத்திற்கு (Fixed Rate) மாறுவதற்கான விருப்பத்தை வங்கிகள் வழங்க வேண்டும். தற்போதைய திருத்தத்தின்படி, வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும்போது, நிலையான விகிதத்திற்கு மாறுவதற்கான விருப்பத்தை, வங்கிகள் தங்கள் விருப்பப்படி வழங்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்நிய செலாவணியில் (Foreign Currency) அல்லது வெளிநாட்டில் ரூபாயில் மதிப்பிடப்பட்ட பத்திரங்களில் உள்ள நிரந்தர கடன் பத்திரங்களுக்கு (Perpetual Debt Instruments - PDI) பொருந்தும் தற்போதைய தகுதி வரம்பை (Eligible Limit) திருத்திய வழிகாட்டுதல்களையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது, வெளிநாட்டுச் சந்தைகள் மூலம் வங்கிகள் தங்கள் அடுக்கு 1 மூலதனத்தை (Tier 1 Capital) அதிகரித்துக் கொள்ள பெரிய அளவில் வாய்ப்பளிக்கிறது. இந்த அனைத்து வழிகாட்டுதல்களும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: