நாட்டில் வரி செலுத்தும் சூழலை எளிதாக்கும் நோக்கில் யு.பி.ஐ (UPI) மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) யு.பி.ஐ (UPI) மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை பணமதிப்புக் கொள்கை அறிவிப்புகளுக்குப் பிந்தைய அறிக்கையில் தெரிவித்தார். மேலும், நாட்டில் வரி செலுத்தும் சூழலை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.
“தற்போது, அதிக பரிவர்த்தனை வரம்புகளைக் கொண்ட குறிப்பிட்ட வகைப் பேமெண்ட்களைத் தவிர, யு.பி.ஐ-க்கான பரிவர்த்தனை வரம்பு ரூ. 1 லட்சமாக உள்ளது. ஒரு பரிவர்த்தனைக்கு யு.பி.ஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இது யு.பி.ஐ மூலம் நுகர்வோர் வரி செலுத்துவதை மேலும் எளிதாக்கும்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறினார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் யு.பி.ஐ-ல் ‘டெலிகேட்டட் பேமெண்ட்ஸ்’ வசதியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இது ஒரு தனி நபரை (முதன்மை பயனர்) மற்றொரு தனிநபரை (இரண்டாம் நிலை பயனர்) முதன்மை பயனரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு வரம்பு வரை யு.பி.ஐ பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும், இரண்டாம் நிலை பயனர் யு.பி.ஐ உடன் இணைக்கப்பட்ட தனி வங்கிக் கணக்கை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். இது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையின் வரம்பையும் பயன்பாட்டையும் மேலும் ஆழப்படுத்தும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.
"யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸின் (யுபிஐ) பயனர் தளத்தை விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய படியாகப் பிரதிநிதித்துவப் பணம் செலுத்த அனுமதிப்பது. இந்த மேம்பாட்டின் மூலம், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இப்போது UPI பணம் செலுத்துவதற்கு ஒரு வங்கிக் கணக்கைப் பயன்படுத்தலாம். மேலும், விவரங்களுக்காக நாம் காத்திருக்கும் போது, இந்த முயற்சியானது UPI பேமெண்ட்டுகளை மேலும் வலுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும். குறிப்பாக நிதி கல்வியறிவு குறைவாக உள்ள கிராமப்புறங்களில், ஒரு குடும்பம் ஒரு வங்கிக் கணக்கைப் பயன்படுத்துகிறது.
இந்த அமைப்பானது பயன்பாட்டு வரம்பு அங்கீகார அம்சத்தின் மூலம் பயனுள்ள கட்டுப்பாட்டை உறுதி செய்வதன் மூலம் பயனர் வசதியை மேம்படுத்தும். இது எளிதான, பாதுகாப்பான மற்றும் தொந்தரவில்லாத நிதி பரிவர்த்தனைகள் மூலம் நுகர்வோர் நம்பிக்கையை மேம்படுத்தும், இதன் மூலம் டிஜிட்டல் அதிகாரம் பெற்ற தேசத்திற்கு பங்களிக்கும்” என்று என்.டி.டி டேட்டா பேமெண்ட் சர்வீசஸ் இந்தியாவின் சி.எஃப்.ஓ ராகுல் ஜெயின் கூறினார்.
அதிகபட்ச தினசரி யு.பி.ஐ (UPI) பரிவர்த்தனை வரம்பு என்ன?
இருப்பினும், ஒரு தனிநபருக்கு யு.பி.ஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கான தினசரி அதிகபட்ச வரம்பு மாற்றப்படவில்லை மற்றும் ரூ.1 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பு யு.பி.ஐ (UPI) மூலம் வரி செலுத்துவதற்கு மட்டுமே பொருந்தும்.
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு யு.பி.ஐ (UPI) பரிவர்த்தனை வரம்பு என்ன?
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வழிகாட்டுதல்களின்படி, ஒரு யு.பி.ஐ (UPI) கணக்கிற்கு ஒரு நாளில் 20 யு.பி.ஐ (UPI)பரிவர்த்தனைகள் வரை அனுமதிக்கப்படும். பயனர் இந்த வரம்பை மீறினால், புதிய யு.பி.ஐ (UPI) கட்டணத்தைச் செலுத்த அவர் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
வியாழக்கிழமை 2024-25 நிதியாண்டுக்கான 3வது இருமாதாந்திர நாணயக் கொள்கை மதிப்பாய்வை அறிவித்த ரிசர்வ் வங்கி, முக்கிய கொள்கை விகிதம் அல்லது ரெப்போ விகிதத்தை 6.5% ஆக மாற்றாமல் வைத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“