Reserve Bank Of India | RBI imposes penalty on TMB | இந்திய ரிசர்வ் வங்கி வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு ரூ.1 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
எம்.எஸ்.எம்.இ (MSME)-களுக்கான ப்ளோடிங் விகிதக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தில் தரப்படுத்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி (TMB) தவறிவிட்டது.
தொடர்ந்து, ஒரே கடன் வகைக்குள் பல வரையறைகளை ஏற்றுக்கொண்டது. மேலும், குறிப்பிட்ட மிதக்கும் (ப்ளோடிங்) விகிதக் கடன்களின் விலையை நிர்ணயிக்கத் தவறிவிட்டது.
இதனால், கடன் வாங்குபவர்களின் வெளிப்புற மதிப்பீடு மீது தவறான புகாரளிக்கப்பட்டது என வங்கி ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.
வங்கியின் மேற்பார்வை மதிப்பீட்டிற்கான சட்டப்பூர்வ ஆய்வு (ISE) மார்ச் 2022 இல் அதன் நிதி நிலையைக் குறிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“