Advertisment

வங்கி லாக்கர்கள் கிடைப்பது எளிதாகுமா? புதிய விதிகளை அறிவித்த ஆர்பிஐ!

லாக்கருக்கான வாடகையை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாடிக்கையாளர் செலுத்தாவிட்டால் உரிய வழிமுறையை பின்பற்றி எந்த லாக்கரையும் வங்கிகள் திறக்கலாம்.

author-image
WebDesk
New Update
RBI New Guidelines, Bank Lockers

RBI revises bank locker rule

லாக்கர்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. இந்த புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட விதிகள் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வங்கி லாக்கர்களுக்கு பொருந்தும்.

Advertisment

லாக்கர்கள் இருக்கும் வளாகத்தின் பாதுகாப்பின் முழுப் பொறுப்பும் வங்கியிடமே இருக்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கி ஊழியர்களின் அலட்சியம் காரணமாக, தீ, திருட்டு, கட்டிடம் இடிந்து விழுந்தால் அல்லது மோசடி நடந்தால், வங்கிகளின் பொறுப்பு. அவர்கள் லாக்கருக்காக வசூலிக்கும் ஆண்டு வாடகையின் 100 மடங்கு என்ற அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.

வங்கிகள் லாக்கர் ஒப்பந்தத்தில் ஒரு விதிமுறையை சேர்க்க வேண்டும், அதன் கீழ் லாக்கரில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்களை வைக்கக்கூடாது, மீறி வைத்தால் வாடிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய விதிகளின்படி, லாக்கர் ஒதுக்கீட்டிற்கான அனைத்து விண்ணப்பங்களுக்கும் வங்கிகள் ரசீது வழங்க வேண்டும். லாக்கர் கிடைக்கவில்லை என்றால், வங்கிகள் காத்திருக்கும் பட்டியலின் எண் தொடர்பான தகவல்களை வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டும். கிளை வாரியாக லாக்கர் ஒதுக்கீடு செய்யும் தகவல் மற்றும் வங்கிகளின் காத்திருப்பு பட்டியல், கோர் பேங்கிங் சிஸ்டம் (சிபிஎஸ்) அல்லது சைபர் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு, இணையான வேறு எந்த கணினிமயமாக்கப்பட்ட அமைப்புகளுடன் இணைக்கப்படும்.

IBAவின் மாதிரி லாக்கர் ஒப்பந்தத்தை வங்கிகள் ஏற்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட அறிவுறுத்தல்களில் வங்கிகளின் இழப்பீட்டு கொள்கை மற்றும் பொறுப்புகளை விரிவாகக் கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, வங்கிகளின் அலட்சியம் காரணமாக லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான அவர்களின் பொறுப்பு வரையறுக்கப்படும். அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இயற்கை பேரிடர், அதாவது, பூகம்பம், வெள்ளம், மின்னல், புயல் மற்றும் சூறாவளி போன்றவற்றினால் ஏற்படும் எந்த இழப்பிற்கும் வங்கி பொறுப்பேற்காது. ஆனால் வங்கி அதன் பொறுப்புகளிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படும் என்று அர்த்தமாகாது. வங்கிகள் இத்தகைய இடர்பாடுகளிலிருந்து தங்கள் இடங்களைப் பாதுகாக்க சரியான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்

லாக்கருக்கான வாடகையை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாடிக்கையாளர் செலுத்தாவிட்டால் வங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். மேலும், உரிய வழிமுறையை பின்பற்றி எந்த லாக்கரையும் திறக்கலாம்.

வாடிக்கையாளருக்கு அறிவித்த பின்னரே வங்கிகள் லாக்கரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியும். வாடிக்கையான டெர்ம் டெபாஸிட் வைப்புத்தொகையை லாக்கர் வாடகையாகப் பயன்படுத்தலாம். ஸ்ட்ராங் ரூம்/பெட்டகங்களை அதாவது லாக்கர்களை பாதுகாக்க வங்கி போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bank Locker Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment