RBI MPC: அமெரிக்க பெடரல் ரிசர்வ் புதன்கிழமை வட்டி விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க பெடரல் வங்கி மூன்றாவது முறையாக வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது.
அந்த வகையில், வளர்ந்து வரும் சந்தைகளில் உள்ள பணவியல் கொள்கைகள் அமெரிக்க பெடரில் வங்கியிலிருந்து குறிப்புகளை எடுப்பது தவிர்க்க முடியாதது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, இந்தியாவில் அதிக பணவீக்கம் மற்றும் உலகளாவிய பொருளாதாரங்களின் சீரற்ற தரவு புள்ளிகள் ஆகியவற்றிலிருந்து வழிகாட்டுதலை எடுக்கும்.
2019 உடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வங்கி முறை பணப்புழக்கம் எதிர்மறையாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7% ஆக இருந்தது.
இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதத்தில், இந்திய சந்தைகள் (பிஎஸ்இ சென்செக்ஸ்) 59,000க்கு மேல் காணப்பட்டது.
ஆனால் இது நீண்ட காலத்திற்கு சாத்தியப்படாமல் போக வாய்ப்பு உள்ளது. மறுபுறம் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது.
இதனால் அடுத்த வாரங்களிலும், இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இந்தக் குழப்பமான காலங்களில் சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது சில்லறை முதலீட்டாளர்களுக்கு சிக்கலாக இருக்கலாம்.
இதற்கிடையில் அடுத்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணவியல் கொள்கை கூட்டம் கூடுகிறது. அப்போது, 0.25-.050 பிபிஎஸ் வரை ரெப்போ வட்டி வீதம் அதிகரிக்க சாத்தியக் கூறுகள் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil