ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு ‘செக்’ வைத்த ஆர்பிஐ; முக்கிய தகவல்கள் இதோ…

RBI new giudelines for Online shopping sites; details here: ஆன்லைன் வணிக தளங்கள் இனி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்களை சேமிக்க முடியாது; ஆர்பிஐ அதிரடி

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும், 16 இலக்க டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு எண் மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டுமென ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) முன்மொழியப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள், வாடிக்கையாளர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்களை மின் வணிக நிறுவனங்களான அமேசான், ப்ளிகார்ட், மிந்தரா, நெட்பிளிக்ஸ் போன்றவை தங்கள் சர்வர்கள் அல்லது டேட்டாபேஸ்களில் சேமித்து வைப்பதைத் தடுக்கிறது. புதிய வழிகாட்டுதல்கள் அடிப்படையில், டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்காக தங்கள் 16 இலக்க அட்டை எண்களை பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் உள்ளிட வேண்டும்.

இவ்வாறு செய்வது வணிக செயல்முறையை மெதுவாக்கலாம், ஆனால் இது தகவலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் கட்டண நுழைவாயில்கள் எந்த தரவையும் சேமிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் செய்கிறது.

ஜனவரி 2022 இல் எதிர்பார்த்தபடி மாற்றங்கள் நடந்தால், வாடிக்கையாளர்கள் தங்கள் 16 இலக்க கிரெடிட் அல்லது டெபிட் கார்டு எண்களை நினைவில் கொள்வது நல்லது, ஏனெனில் அப்போது தான் அவர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எளிதாக இருக்கும்.

நீங்கள் எங்கிருந்து ஷாப்பிங் செய்தாலும், காலாவதி தேதி மற்றும் எந்தவிதமான பரிவர்த்தனைக்கும் CVV உடன் 16 இலக்க எண்ணை நீங்கள் உள்ளிட வேண்டும்.

பொதுவாக, இ-காமர்ஸ் மாதிரியானது, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்பவும் புதிய பொருட்களை சந்தைப்படுத்தவும் நிறுவனங்களால் சேமிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு வேலை செய்கிறது. வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், அத்தகைய தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேறப, அவர்கள் விளம்படுத்துதல் கடினமாகும். தங்கள் புதிய அல்லது வாடிக்கையாளர் விருப்ப தெரிவை அவர்களிடம் கொண்டு செல்வது கடினமாகும்.

இதனால், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவது மிகவும் தொந்தரவாக இருக்கும் என்பதால், மக்கள் வேறு கட்டண முறையான UPI க்கு மாறலாம். UPI க்கு எந்த தகவலும் தேவையில்லை, ஒருமுறை நீங்கள் உங்கள் வங்கிக் கணக்குடன் பயன்பாட்டை இணைத்துவிட்டால் எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய விதிகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விரும்பியது, ஆனால் வங்கிகள் தயாராக இல்லாததால் அது ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rbi new giudelines for online shopping sites details here

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com