ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, ஒரு பரிவர்த்தனை தொழில்நுட்பம் போன்ற எந்த காரணங்களினாலோ பூர்த்தி செய்யப்படாமல் போனால் என்றால் ஐந்து நாட்களுக்குள் அது சரி செய்யப்பட வேண்டும் என்று ஆர்பிஐ இந்தியாவின் மற்ற வங்கிகளுக்கு அறிவுருத்தியுள்ளது. மேலும், வங்கி தரப்பில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக ஸ்வைப்பிங் மெஷின், ஆதார் பணப் பரிவர்த்தனை தோல்வி அடைந்தாலும், சமந்தப்பட்ட வங்கிகள் ஐந்து நாட்களுக்குள் வாடிக்கையாளர்களின் குறைகளை சரி செய்திருக்க வேண்டும்.
ஐந்து நாட்களுக்குள் சரி செய்யப் படாமல் இருந்தால், பின் வரும் ஒவ்வொரு நாட்களுக்கும் வாடிகையாளர்களுக்கு ரூ.100 அபராதமாகவும் செலுத்த வேண்டும் என்று அறிவுருத்தியுள்ளது.
IMPS பரிவர்த்தனைகளில் ஏற்படும் கோளாறுகளை ஒரே நாட்களுக்குள் சமந்தப்பட்ட வங்கி சரி செய்திருக்க வேண்டும். இல்லையேல், சரி செய்யும் வரை பின் வரும் நாட்களில் தினமும் ரூ.100 அபாராதமாக வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டும். வங்கி தரப்பில் ஏற்பட்ட தவறுகளுக்குத் தான் இந்த ஆர்பிஐ அறிவிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு ஒவ்வொரு வங்கியும் பணப்பரிவர்தனை கோளாறை எத்தனை நாட்களுக்குள் சரி செய்யா வேண்டும் , அபராதம் வைக்க வேண்டுமா? வேணாமா? என்பதை தனிப்பட்ட முறையில் கவனித்து வந்தனர். ஆனால், தற்போது ஆர்பிஐ எல்லா வங்கிக்கும் பரிவர்த்தனை தொடர்பான நடைமுறையை சீராக்கியுள்ளது.