இந்திய ரிசர்வ் வங்கி ஃபிக்ஸ்ட் டெபாசிட் மற்றும் டேர்ம் டெபாசிட்களுக்கான விதிகளை மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகள் அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள டெபாசிட்களுக்கு பொருந்தும்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, ஃபிக்ஸிட் டெபாசிட் முதிர்ச்சியடைந்த பிறகும் டெபாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர் உரிமை கோரவில்லை என்றால் வாடிக்கையாளர் சேமிப்பில் வட்டி அடிப்படையில் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். டேர்ம் டெபாசிட் முதிர்ச்சியடைந்ததும், வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெறவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் மேலும் வட்டி சம்பாதிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்
இப்போது வரை, முதிர்ச்சியடைந்த பிறகும் உரிமை கோரப்படாத அல்லது திரும்ப பெறப்படாத டேர்ம் டெபாசிட்களுக்கு வட்டி வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது முதிர்ச்சியடைந்த பிறகும் உரிமை கோரப்படாத தொகை சேமிப்புக் கணக்கிற்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை வழங்கும்.
இந்த புதிய விதிமுறைகள் அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வைப்பு செய்ய பொருந்தும்.
ஃபிக்ஸிட் டெபாசிட்
ஃபிக்ஸிட் டெபாசிட் என்பது ஒரு நிலையான வட்டிக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கிகளில் வைக்கப்படும் ஒரு டெபாசிட் ஆகும். இது தொடர்ச்சியான, ஒட்டுமொத்த, வருடாந்திரம், மறு முதலீட்டு வைப்பு மற்றும் பண சான்றிதழ்களை உள்ளடக்கியது.
ஃபிக்ஸிட் டெபாசிட்டில், ஒரு தொகை முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படுகிறது. இது சாதாரண சேமிப்புகளை விட சற்றே சிறந்த வட்டி விகிதத்தை அளிக்கிறது. அதே முதலீடு 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு செய்யப்பட்டால், வரி சேமிப்பின் நன்மையும் கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil