/indian-express-tamil/media/media_files/SJNocgPKG4pI9fftZdOC.jpg)
நடப்பு நிதியாண்டில் 4-வது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக நீடிக்கிறது.
Reserve-bank-of-india | RBIrepo rate: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. இந்த நிலையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ வட்டி) விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன், கடந்த ஆண்டு மே முதல் ஏப்ரல் 2023 வரை ரெப்போ விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், 'குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவிகிதமாகவே நீடிக்கும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. பண்டிகைக் காலங்கள் தொடங்கியுள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: RBI Policy: MPC hits pause button for 4th time, repo rate unchanged at 6.5%
பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தொடரும். பணவீக்கத்தை 4%-க்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவிகிதமாக இருந்த மொத்த பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவிகிதமாக குறைந்துள்ளது' என்று அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டில் 4-வது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.