வரும் நிதியாண்டில் பணவீக்கம் 5.3 சதவீதமாக குறையும்.. சக்தி காந்த தாஸ்

2023-24ல் பணவீக்கம் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது 4 சதவீத இலக்கை விட அதிகமாக இருக்கும்.

2023-24ல் பணவீக்கம் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது 4 சதவீத இலக்கை விட அதிகமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
RBI projects inflation to fall to 5 3 per cent in FY24

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்

இந்த ஆண்டு 6.5 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் அடுத்த நிதியாண்டில் 5.3 சதவீதமாக குறையும் என்று ரிசர்வ் வங்கி புதன்கிழமை (பிப்.8) கணித்துள்ளது.
அந்த வகையில் நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கம், காய்கறி விலைகள் எதிர்பார்த்ததை விடவும் சரிவு மற்றும் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 95 அமெரிக்க டாலராக இருந்ததன் காரணமாகவும், முன்னதாக கணிக்கப்பட்ட 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக மேம்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், “2023-24ல் பணவீக்கம் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது 4 சதவீத இலக்கை விட அதிகமாக இருக்கும்.
புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய நிதிச் சந்தை ஏற்ற இறக்கம், எண்ணெய் அல்லாத பொருள்களின் விலை உயர்வு மற்றும் நிலையற்ற கச்சா எண்ணெய் விலைகள் ஆகியவற்றால் தொடரும் நிச்சயமற்ற தன்மைகளால் கண்ணோட்டம் கணிக்கமுடியாத வகையில் உள்ளது.

அதே நேரத்தில், இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.
மேலும், சக நாணயங்களுடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் குறைந்த ஏற்ற இறக்கத்தில் உள்ளது” என்றார்.
இந்த நிலையில், சராசரியாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு USD 95 ஆக இருந்தால், பணவீக்கம் 2022-23 இல் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

இருப்பினும், நவம்பர்-டிசம்பர் 2022 இல் இந்தியாவில் நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் 6 சதவீதத்தின் மேல் சென்றது.
இது காய்கறிகளின் விலைகளின் வலுவான சரிவால் உந்தப்பட்டது. இருப்பினும், முக்கிய பணவீக்கம் சமாளிக்கும் நிலையில் உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Reserve Bank Of India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: