வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஏனைய வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமே ரெப்போ என அழைக்கப்படுகிறது. குறிப்பாக 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த ரெப்போ வட்டி விகித்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கும். அதன் பயனைப் பெறும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றும். இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தால் ஏனைய வங்கிகளும் வீட்டுக்கடன் வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.
கடந்த பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி 7 முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 6.50 சதவிகிதத்தில் இருந்து 5.40 சதவிகிதமாக ரெப்போ வட்டி குறைக்கப்பட்டுள்ளதனால் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் பல வங்கிகள் கடன்களுக்கான வட்டியை குறைக்கவில்லை.
இதையடுத்து புகார்கள் கூறப்பட்டதைத்தொடர்ந்து இந்த நிலையை தவிர்க்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்துடன் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை இணைக்க ரிசர்வ் வங்கி அக்டோபர் 1ம் தேதி முதல் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வீடு வாகனம் தனி நபர் மற்றும் சிறு குறு நிறுவனங்களின் கடன்களுக்கான வட்டி விகிதம் வரும் மாதம் முதல் குறைக்கப்படவுள்ளது எனக்கூறப்பட்டுள்ளது