இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த நிலையில் ஜூலை 31 2023 வரை 88 சதவீதம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பியுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
அதாவது புழக்கத்தில் இருந்த 3.14 டிரில்லியன் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் 42 ஆயிரம் கோடி ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
இதுமட்டுமின்றி வங்கித் தகவல்களின் படி, புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 மதிப்பிலான மொத்த ரூபாய் நோட்டுகளில் சுமார் 87% டெபாசிட்களாகவும், மீதமுள்ள சுமார் 13% வங்கி கவுண்டர்கள் மூலமும் திரும்பியுள்ளது.
முன்னதாக, ரிசர்வ் வங்கி, மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதற்கு பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் தாள்களை புழக்கத்தில் பெரிதாக பயன்படுத்தவில்லை எனக் கூறப்பட்டது.
அதாவது, ரூ.6.73 டிரில்லியனாக இருந்த ரூ.2 ஆயிரம் தாள்கள் புழக்கம் ரூ. 3.62 டிரில்லியன் அளவுக்கு குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“