Advertisment

சிக்கிய ஐ.சி.ஐ.சி.ஐ, கோடக் மஹிந்திரா: கோடிக்கணக்கில் அபராதம் தீட்டிய ரிசர்வ் பேங்க்!

வங்கிகளின் விதிமீறல்கள் தொடர்பான முழு உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.3.95 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
How many bank accounts can one have What is the RBI rule

நிதி அல்லாத பொருட்களின் விற்பனை மற்றும் மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கிக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புகார் செய்யத் தவறியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Penalty on ICICI Bank for non compliance: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாததற்காக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ரூ.12.19 கோடி அபராதம் விதித்துள்ளது.
அதேபோல், பல்வேறு விதிகளை மீறியதற்காக கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.3.95 கோடி அபராதம் விதித்துள்ளது.

Advertisment

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் கீழ், 'வணிக வங்கிகளின் மோசடிகள் வகைப்படுத்துதல் தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக ஐசிஐசிஐ வங்கி மீது அபராதம் விதிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் வாசிக்க : RBI slaps Rs 12.19 crore penalty on ICICI Bank for non-compliance

மேலும், நிதி அல்லாத பொருட்களின் விற்பனை மற்றும் மோசடிகள் குறித்து ரிசர்வ் வங்கிக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புகார் செய்யத் தவறியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியில், சேவை வழங்குநரின் வருடாந்திர மதிப்பாய்வை மேற்கொள்ளத் தவறிவிட்டது என்றும், வாடிக்கையாளர்களை இரவு 7 மணிக்குப் பிறகும், காலை 7 மணிக்கு முன்பும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்யத் தவறியது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இருப்பினும், ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா விதிமீறல்கள் தொடர்பான முழு உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Icici Bank Kotak Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment