வெளிநாடுகளில் சம்பாதித்து வீட்டிற்கு அதிக அளவு பணம் அனுப்பும் தென்னிந்தியர்கள்

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் ஆந்திராவின் பங்கு மட்டும் ரூ. 2,30,900 கோடியாம்...

ஜார்ஜ் மேத்யூ

2017 இந்தியாவின் அந்நிய செலவாணி : வீட்டின் தேவைகளுக்காக வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெளிநாடுகளில் இருந்து சம்பாதித்த பணத்தை தாய்நாட்டிற்கு அனுப்பி, நாட்டின் அந்நிய செலவாணியை உயர்த்தி இருக்கிறார்கள் தென்னிந்தியாவை சேர்ந்த நான்கு மாநிலத்தவர்கள்.

உலகமெங்கும் வாழும் இந்திய, துறைசார் வேலையாட்கள், அதிக அனுபவமுள்ள திறமைமிக்க வேலையாட்கள், ஊழியர்கள், மற்றும் அனுபவமற்ற வேலையாட்கள் மற்றும் ஊழியர்கள் மூலமாக கடந்த ஆண்டு இந்தியா பெறப்பட்ட அந்நிய செலவாணியின் மதிப்பு சுமார் 69 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் 2017ம் ஆண்டிற்கான அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவலின் படி, கடந்த ஆண்டு மட்டும் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 2,30,900 கோடி ரூபாய் பணத்தினை தங்களின் வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2017 இந்தியாவின் அந்நிய செலவாணி – பட்டியலில் இடம் பெற்ற தென்னிந்திய மாநிலங்கள்

கடந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த அந்நிய செலவாணியில் இந்த மாநிலங்களின் பங்கானது சுமார் 69 பில்லியன் டாலர் அந்நிய செலவாணியில் கேரளா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் பெற்ற பணத்தின் மதிப்பு 58.7% ஆகும். இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறது கேரளா.

19 சதவீதம் அன்னிய செலவாணி ஈட்டித் தந்துள்ளது கேரளா. அதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநிலம் 16.7 சதவீதம் பெற்று சுமார் 11.52 பில்லியன் டாலர்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருக்கிறது. கர்நாடகாவிற்கு 10.35 பில்லியன் அமெரிக்க டாலர்களை அம்மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் அனுப்பியுள்ளனர்.

2017 இந்தியாவின் அந்நிய செலவாணி

பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மாநிலங்கள்

கடந்த ஆண்டு வெளிநாட்டு வாழ் ஊழியர்களால் தாய் நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணத்தில் அடிப்படையில் வெளியிடப்பட்ட சர்வேயில் முதல் இடம் பிடித்திருந்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை அடுத்து சீனா இரண்டாம் இடம் பிடித்தது. இது குறித்த விரிவான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்தியர்கள் அதிக அளவு வேலை செய்யும் நாடுகளின் பட்டியல்

கடந்த வருடம் பெறப்பட்ட அந்நிய செலவாணியின் அடிப்படையில் இந்தியர்கள் கீழ்கண்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் பணம் அனுப்பியுள்ளனர். அமீரகம், அமெரிக்கா, சௌதி அரேபியா, கத்தார், குவைத், இங்கிலாந்து, ஓமன் போன்ற நாடுகளில் இருந்து தான் இந்தியாவின் 90% அந்நிய செலவாணி கடந்த வருடம் பெறப்பட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close