இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) வங்கிகள் தங்கள் வணிகத் திட்டங்களில் குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் கொண்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து கவலைகள் கொடிகட்டிப் பறக்கின்றன, அதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் பிற நாடுகளுடனான வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ (Vostro) கணக்குகளைத் திறக்க அரசு வங்கிகளை அரசாங்கம் தூண்டியது, மேலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் வரவிருக்கும் மந்தநிலை பற்றிய கவலைகளும் இதற்கு காரணம்.
நவம்பர் 16 அன்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உள்நாட்டு சந்தையில் கடன் வளர்ச்சி ஆரோக்கியமானதாகவும், நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, வங்கிகள் கடனுக்கான துறைசார் ஒதுக்கீட்டை பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக, வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன. கூட்டத்தில் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பதில்களைக் கேட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு அச்சிடப்படும் வரை பதில் கிடைக்கவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, மேற்கு மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன, மேலும் அந்த நாடு SWIFT செய்தியிடல் அமைப்பிலிருந்து விலகி உள்ளது (நாடுகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்த வங்கிகளால் பயன்படுத்தப்படுகிறது). ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் ரஷ்ய இறக்குமதிகளை இந்தியா அதிகளவில் சார்ந்திருப்பது ஆகியவை இந்திய ரூபாயில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான ஏற்பாடுகளின் பின்னணியில் முக்கிய காரணங்களாகும்.
இந்த ஆண்டு ஜூலையில், இந்திய ரூபாயில் வெளிநாட்டு வர்த்தகம் குறித்த வழிகாட்டுதல்களை ஆர்.பி.ஐ அறிவித்தது, இது வர்த்தகத்திற்கு இந்தியா டாலரை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ரூபாயை வலுப்படுத்தவும் உதவும். இந்த ஏற்பாட்டின் கீழ், இந்தியாவில் உள்ள வங்கிகள் வர்த்தகத்திற்காக கூட்டாளி நாட்டின் தொடர்புடைய வங்கி/களின் Vostro கணக்குகளை (ஒரு இந்திய வங்கி மற்றொரு வங்கியின் சார்பாக வைத்திருக்கும் கணக்கு) திறக்கும். இந்திய இறக்குமதியாளர்கள் இந்தக் கணக்குகளில் இறக்குமதிக்கான பணத்தை ரூபாயில் செலுத்தலாம். இந்த வருமானம் (இந்திய இறக்குமதியிலிருந்து) பின்னர் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ரூபாயில் செலுத்த பயன்படுத்தப்படலாம்.
எவ்வாறாயினும், மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு அஞ்சுவதால் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன மற்றும் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி, ரஷ்யாவுடனான வர்த்தகத்தை எளிதாக்க எந்தவொரு சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கையும் திறப்பதில் இருந்து விலகி உள்ளது.
இதுவரை, அரசுக்குச் சொந்தமான UCO வங்கி மற்றும் தனியார் துறையான IndusInd வங்கி மற்றும் யெஸ் வங்கி போன்ற வங்கிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ரஷ்ய கூட்டாளர் வங்கிகளால் 12 சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், இந்தியா ரஷ்யாவுடனான தனது வர்த்தகத்தை “எதிர்வரும் எதிர்காலத்தில்” இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக அளவுகளில் அதிகரிப்பு முக்கியமாக தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா அதிகமாக இறக்குமதி செய்ததன் பின்னணியில் வந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு முன் ரஷ்யாவிலிருந்து மொத்த கச்சா எண்ணெயில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இறக்குமதி செய்த இந்தியா, தற்போது தனது மொத்த தேவையில் 22 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய்யின் முதல் இரண்டு சப்ளையர்களாக இருந்த ஈராக் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியானது, இந்தியாவின் மொத்த இறக்குமதியில் முறையே 21 சதவிகிதம் மற்றும் 16 சதவிகிதம் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil