இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் நாணயங்களை செவ்வாய்க்கிழமை (நவ.1) அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக இந்த கரன்சிகள் நாளை அறிமுகப்படுத்தப்படும். தொடர்ந்து, ஒரு மாதத்துக்குள் இந்த டிஜிட்டல் கரன்சிகள் நாடு முழுவதும் முழு பயன்பாட்டுக்கு வரும்.
இந்த டிஜிட்டல் கரன்சியை அரசு பத்திரங்கள், பங்கு சந்தை பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டிஜிட்டல் கரன்சியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி மற்றும் ஹெச்எஸ்பிசி உள்ளிட்ட 9 வங்கிகள் வாயிலாக அறிமுகப்படுத்தப்படுத்துகிறது.
நாட்டில் நிதி ஒருங்கிணைப்பு, பண பட்டுவாடா முறையை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் திறமையாக கையாளுதல் உள்ளிட்ட நிர்வாக வசதிக்காக இந்த டிஜிட்டல் கரன்சிகள் வெளியிடப்பட உள்ளன.
முன்னதாக, இது தொடர்பாக அக்டோபர் மாத தொடக்கத்தில் மத்திய அரசு ஏற்கனவே விரிவான ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil