இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்போடகரன்சி என்னும் மெய்நிகர் பணத்துக்கு மதிப்பு அதிகரித்துவருகிறது.
பலரும் இதில் முதலீடு செய்துவருகின்றனர். எனினும் கிரிப்போட உள்ளிட்ட பணத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில், மும்பை மற்றும் டெல்லி உட்பட நான்கு நகரங்களில் உள்ள சில்லறை வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள், டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் ரூபாயை (e₹-R) அல்லது e-ரூபாய் பயன்படுத்த முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.
அந்த வகையில், சில்லறை விற்பனைப் பிரிவிற்கான இந்திய நாணயத்தின் டிஜிட்டல் வடிவத்தின் முதல் கட்டம் காத்திருக்கிறது.
இந்த டிஜிட்டல் ரூபாய் முதலில் மும்பை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் அறிமுகமாகிறது.
பின்னர் அகமதாபாத், காங்டாக், கவுஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா ஆகிய நான்கு நகரங்களில் தொடங்கப்படும்.
மேலும், e₹-R என்பது சட்டப்பூர்வ டெண்டரைக் குறிக்கும் டிஜிட்டல் டோக்கன் வடிவத்தில் இருக்கும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த கரன்சிகள் முதல் கட்டமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகள் நாடு முழுவதும் உள்ள நான்கு நகரங்களில் தொடங்கும்.
பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நான்கு வங்கிகளும் இந்தத் திட்டத்தில் பின்னர் இணைந்துக் கொள்ளும்.
தற்போது காகித நாணயம் மற்றும் நாணயங்கள் வெளியிடப்படும் அதே மதிப்புகளில் E-ரூபாய் வெளியிடப்படும். இது இடைத்தரகர்கள் மூலம் விநியோகிக்கப்படும்.
அதாவது வங்கிகள். "பயனர்கள் பங்குபெறும் வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் வாலட் மூலம் e₹-R உடன் பரிவர்த்தனை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil