இ.எம்.ஐ கட்ட தவறினால் ஸ்மார்ட்போன் லாக்: ஆர்.பி.ஐ. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்ட பரபரப்புத் தகவல்

கடன் தவணைகளை செலுத்தத் தவறும் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன்களை ரிமோட் மூலம் லாக் செய்ய கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

கடன் தவணைகளை செலுத்தத் தவறும் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன்களை ரிமோட் மூலம் லாக் செய்ய கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
RBI to let lenders lock your smartphone

இ.எம்.ஐ. கட்டத் தவறினால் ஸ்மார்ட்போன் லாக்: ஆர்.பி.ஐ. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்ட பரபரப்புத் தகவல்

கடன் தவணைகளை (EMIs - Equated Monthly Instalments) செலுத்த தவறும் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன்களை, கடன் வழங்கும் நிறுவனங்கள் ரிமோட் மூலம் லாக் செய்ய அனுமதிக்கும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிசீலித்து வருவதாக அதன் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, அக்டோபர் 1 அன்று நடந்த நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Advertisment

தவணையில் வாங்கப்பட்ட மொபைல் போன்களுக்கு கடன் தவணை செலுத்தப்படாவிட்டால், அந்தப் போன்களை லாக் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், "இந்த விஷயம் தற்போது பரிசீலனையில் உள்ளது. நுகர்வோர் மற்றும் கடன் வழங்குவோர் ஆகிய இரு தரப்பிலிருந்தும் வந்த வாதங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எங்க முக்கிய நோக்கம் நுகர்வோர் உரிமைகள் மற்றும் டேட்டா பாதுகாப்பைப் பாதுகாப்பதாகும். நுகர்வோர் உரிமைகள் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதே நேரத்தில், கடன் வழங்குவோரின் நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதையும் நாங்கள் கவனிப்போம்," என்று கூறினார்.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ராஜேஸ்வர் ராவ் இதுகுறித்து பேசுகையில், "வாடிக்கையாளர் உரிமைகள், தரவுப் பாதுகாப்பு மற்றும் கடன் வழங்குவோரின் தேவைகள் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதில் 2 பக்கங்களிலும் நிறைகள் மற்றும் குறைகள் உள்ளன. எனவே, நாங்க இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருகிறோம். நிறைகள், குறைகளை மதிப்பிட்டு, தகுந்த நேரத்தில் ஒரு முடிவை எடுப்போம்," என்று தெரிவித்தார்.

ஸ்மார்ட்போன் மற்றும் பிற நுகர்வோர் எலெக்ட்ரானிக் பொருட்களுக்காக எடுக்கப்படும் சிறு தொகைக் கடன்களில் (small-ticket loans) தவணை மீறல் விகிதம் (default rate) அதிகமாக இருப்பதாகப் பல தகவல்கள் தெரிவிக்கின்றன. போன்களை லாக் செய்யும் வாய்ப்பை வழங்குவதன் மூலம், சிறு தொகைக் கடன்களில் அதிகரித்துவரும் இ.எம்.ஐ. மீறல் விகிதத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கடன் வழங்குநர்களுக்கு இந்த வசதி கிடைத்தால், வேண்டுமென்றே இ.எம்.ஐ செலுத்தாமல் இருப்பவர்கள் (willful defaults) இந்த செயலிலிருந்து பின்வாங்குவார்கள்.

Advertisment
Advertisements

நாடு முழுவதும் நுகர்வோர் எலெக்ட்ரானிக் பொருட்களில், குறிப்பாக ஸ்மார்ட்போன்களில், 3-ல் ஒரு பங்கு பொருட்கள் இ.எம்.ஐ. முறையில் வாங்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மத்திய வங்கி இதற்கு அனுமதி அளித்தால், கடன் ஒப்பந்தத்தின்போது கடன் பெறுபவரின் தெளிவான ஒப்புதல் (explicit consent) கட்டாயம் தேவைப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடன் ஒப்பந்தத்தின் போதே ஒரு "டிவைஸ் லாக் செய்யும் ஆப்" (device lock app) நிறுவப்படுவதன் மூலம் சாத்தியமாகும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இ.எம்.ஐ. செலுத்தப்படாமல் போனால், நிலுவைத் தொகையைச் செலுத்தும் வரை சாதனத்தைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் விளக்கினர்.

முன்னதாக, கடந்த ஆண்டுதான், கடன் தவணையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மொபைல் போன்களை லாக் செய்வதில் இருந்து நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சட்டங்கள் இந்த நடைமுறையை வெளிப்படையாக அனுமதிக்கவில்லை என்றும், இது ஒரு regulatory gray zone இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரிசர்வ் வங்கி தனது Fair Practices Code இன்னும் சில மாதங்களில் புதுப்பிக்கும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: