தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 2,650 கோடி ரூபாய் அளவுக்கு 2,000 நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றியுள்ளதாக, மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்ட மூன்று வங்கிகள் பதிவு செய்துள்ளன.
திரும்பப் பெறப்பட்ட கரன்சி நோட்டுகளின் பரிவர்த்தனையை விட டெபாசிட் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகளில் 96% திரும்பப் பெறப்பட்ட நிலையில், வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும், திரும்பப் பெறப்பட்ட நோட்டுகளை மாற்றுவதற்கும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை, இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து, நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) கிளைகள், மே முதல் செப்டம்பர் 29 வரை 4,000 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்து மாற்றியுள்ளது.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்த பங்கு 1,230 கோடி, என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் MD & CEO அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியில் (CUB) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 726 கோடி ரூபாய்க்கு 2,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்து மாற்றப்பட்டன.
இதில் டெபாசிட்களின் பங்கு 691 கோடி. மொத்தத்தில், 16 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் செயல்படும் சிட்டி யூனியன் வங்கி, மே 19 மற்றும் செப்டம்பர் 30, 2023 க்கு இடையில் இந்தியா முழுவதும் 1,087 கோடி ரூபாய்க்கு 2,000 நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றியுள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (டிஎம்பி) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 693 கோடி ரூபாய்க்கு, 2,000 நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றியுள்ளது.
இதற்கிடையில், சனிக்கிழமையன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் உள்ள 3.5 லட்சம் கோடி 2,000 நோட்டுகளில், 3.4 லட்சம் கோடி பெறப்பட்டுள்ளது, செப்டம்பர் 29 நிலவரப்படி 0.14 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் உள்ளது.
இதனால், மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2,000 நோட்டுகளில் 96% திரும்பி வந்துவிட்டன.
வங்கிக் கிளைகளில் 2,000 நோட்டுகளை டெபாசிட் செய்வது/மாற்றுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8 ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“