Real estate sectors are first choice for investment : குடியிறுப்பு துறையில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் வீடு, மனை இவற்றில் முதலீடு செய்வதுதான் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு முதல் தேர்வாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ANAROCK-LIC கணக்கெடுப்பில் மிக அதிகமாக 59 சதவிகித பங்கேற்பாளர்கள் பங்கு சந்தை, தங்கம் மற்றும் வங்கி நிரந்தர வைப்புத் தொகை ஆகிய சொத்து வகைகளோடு ஒப்பிடும் போது வீடு, மனை இவற்றில் முதலீடு செய்வதைத் தான் விரும்பியுள்ளனர்.
மேலும் படிக்க : பிரதான குடியிருப்பு சந்தைகளில் மோசமான வளர்ச்சியை எட்டிய சொத்து மதிப்பு
இந்த சீரான அதிகரிப்பு, வாங்குபவர்களின் பொதுவான மனநிலை வீடு, மனை தான் சிறந்த முதலீட்டுத் தேர்வு என்று தொடர்ந்து அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மேலும் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதும் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்ளக் ஒரு காரணம். கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இதே கணக்கெடுப்பில் 14 சதவிகிதம் பேர் நிரந்தர வைப்புத் தொகைகளில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 2019ல் வெறும் 10 சதவிகதம் பேர் தான் நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்.
அதே சமயம் பங்கு சந்தை தனது நிலையை தக்கவைத்துள்ளது. இரண்டாவது மிகவும் விருப்பமான சொத்து வகை முதலீட்டுத் திட்டமாக 23 சதவிகித பங்கேற்பாளர்களால் பங்கு சந்தை முதலீடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக வெறும் 8 சதவிகிதம் பங்கேற்பாளர்கள் மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : பிரதான குடியிருப்பு சந்தைகளில் மோசமான வளர்ச்சியை எட்டிய சொத்து மதிப்பு
பல உண்மையான வீடு வாங்குபவர்கள் தங்களுடைய வாழ்நாள் தேவைக்காக வீடு வாங்க இன்னும் காத்துக் கொண்டு இருக்கின்றனர், என்பதும் இந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பல நகரங்களில் சொத்து விலை குறைந்துவிட்டது, மேலும் வீடு, மனை விற்பனையாளர்களும் பல சிறந்த சலுகைகளை தர காத்து இருக்கின்றனர். எனவே உங்களுடைய தனிப்பட்ட தேவைக்காக ஒரு சொத்து வாங்க இதை விட உகந்த நேரம் இனி வரப்போவதில்லை. ஆக மொத்தம் நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பில் பதில் அளித்த 63 சதவிகிதம் மக்கள் அடுத்த ஒரு ஆண்டுக்குள் வீடு, மனை சந்தையில் குதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எஸ்.பி.ஐயின் அறிவிப்பைப் பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”