12,000 பேருக்கு கல்தா; 'ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு'... டி.சி.எஸ். முடிவு பற்றி விளக்கும் ஆனந்த் சீனிவாசன்

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக தகவல் பரவுகிறது. இதற்கான, காரணத்தை பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் விவரித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக தகவல் பரவுகிறது. இதற்கான, காரணத்தை பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் விவரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TCS Layoff

இன்றைய சூழலில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஏராளமானோர் விரைந்து பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பின்னர், இத்தகையை பணி நீக்க நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு கூறி வருகின்றனர். இந்த சூழலில், இதற்கான காரணத்தை பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களில் 5% பேரை பணிநீக்கம் செய்துள்ளதற்கு சத்யா நாதெல்லா வருத்தம் தெரிவித்துள்ளார். எதிர்கால திட்டங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், மேலும் பணி நீக்கங்கள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இந்த நடைமுறை இந்தியாவிற்கும் வந்துள்ளது என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில், டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனமும் மூத்த மற்றும் நடுத்தர நிர்வாக பதவிகளில் உள்ள சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அவர்களுக்கு கடைசி மாதத்திற்கான ஊதியம் மற்றும் காப்பீட்டு வசதிகள் வழங்கப்படும். இது தவிர வேலைக்கு பணி நியமன ஆணை கொடுத்தும், தங்களை பணியமர்த்தவில்லை என்று பலர் கூறுகின்றனர்.

நிறுவனத்தில் 35 நாட்கள் வேலை இல்லாமல் இருத்தல் அல்லது ஒரு வருடத்தில் 200 நாட்களுக்கு பில்லிங் செய்யாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படும் போன்ற புதிய கொள்கைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தாக்கத்தால் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.

Advertisment
Advertisements

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. மேலும், இந்திய அரசின் ரூபாய் மதிப்பை வலுப்படுத்தும் கொள்கை, ஏற்றுமதியை சார்ந்த நிறுவனங்களை பாதித்துள்ளதும் இந்த பணி நீக்கங்களுக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். எனவே, இது போன்ற பணி நீக்க நடவடிக்கை தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் நடைபெறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Tcs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: