Reasons behind Indian Economy growth crisis : இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் 5சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் பெரு நிறுவனமான ஆட்டோமொபைல்இ உற்பத்தித்துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறை ஆகியவை சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்காததும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்க ஒரு காரணம். பொருளாதாரம் சரிவையடுத்து மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்துள்ள போதும்இ அதன் தாக்கம் உடனடியாக எதிரொலிக்கவில்லை.
வேலை இன்மை மற்றும் வங்கிகளில் உள்ள நிர்வாக குளறுபடிகளை சீர்செய்ய வேண்டும்இ அத்துடன் வேளாண்துறையை மீள் கட்டியமைக்க வேண்டும். மேலும் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதை அதிகரிப்பதன் மூலமும் பொருளாதார சரிவில் இருந்து மீள முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க : ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் ப்ளான்களை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்