இந்தியாவில் தொடர்ச்சியாக சரிந்திருந்த தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. இதேவேளையில், அமெரிக்க டாலர் மதிப்பு கணிசமான தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவிலேயே இருக்கும் வேளையில், இந்தியாவில் திருமண சீசன் வர்த்தகம் சூடுபிடித்துள்ளதால், தங்கம் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை கடந்த 24 மணிநேரத்தில் 2540 டாலரில் இருந்து மீண்டு 2576 டாலருக்கு உயர்ந்து. இது, தற்போது 2,555 டாலராக குறைந்துள்ளது. இந்த தடுமாற்றம் தான் இந்திய சந்தையில் எதிரொலித்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று காலையில் 74, 900 ரூபாய்க்கு துவங்கிய 10 கிராம் தங்கம் விலை, தற்போது 11 சதவீத உயர்வுடன் 74,072 ரூபாயாக அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பின் ஆதிக்கத்திற்கு மத்தியிலும், அமெரிக்க பத்திர சந்தையில் லாப அளவீடுகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை தனது இரண்டு மாத சரிவுக்கு மத்தியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பு தற்போது சர்வதேச நாணய சந்தையின் கூடையில் 106.54 ஆக உள்ளது. ஆனால் நேற்று இதன் மதிப்பு 107 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இஸ்ரோல் - ஈரான் - லெபனான் மத்தியிலான போர் அச்சத்துடன், ரஷ்யா - உக்ரைன் போர் அச்சமும் அதிகரித்துள்ளது. இவ்விரண்டும் முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பான பிரிவில் பணத்தை ஒதுக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை நோக்கி நகர்த்தியுள்ளதும் தங்கம் விலை தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 69,450 ரூபாயாக உள்ளது, இது, 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 75,760 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து 55,560 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இள்லாமல் நேற்றை விலையான 99,000 ரூபாயாக உள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், 1 கிராம் பிளாட்டினம் விலை 23 ரூபாய் வரையில் உயர்ந்து, இன்று 10 கிராம் பிளாட்டினம் 25,520 ரூபாயாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“