சொந்த வீடு.. இன்றும் பலரின் கனவும் சொந்த வீடு ஒன்றை கட்டி செட்டில் ஆகிவிடும் என்பது தான். வீட்டு விசேஷங்கள், ஆபிஸ் பார்ட்டிகள், நண்பர்களுடன் விசிட் என எங்கும் சென்றாலும் பெயருக்கு அடுத்தப்படியாக கேட்கப்படும் ஒரே கேள்வி நீங்கள் இருப்பது சொந்த வீடா? வாடகை வீடா? என்பது தான்.
இந்த காரணத்திற்காகவே இன்றைய தலைமுறையினர் வீடு கட்டுவதில் அதிகமான கவனத்தை செலுத்துகின்றனர். அவர்களுக்கு உதவுவது போல் வங்கிகளிலும் ஹோம்லோன் சேவை எளிமையாக்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் பலருக்கும் வங்கிகளில் மாதக்கணக்கில் அலைந்தால் கூட ஹோம்லோன் அவ்வளவு எளியாத கிடைப்பதில்லை . அதற்கு என்ன காரணம் தெரியுமா? ஆவணத்தில் தொடங்கி வீட்டு முகவரி வரை நீங்கள் செய்யும் சிறு தவறுகள் ஹோம்லோன் ஓகே ஆவதை தாமதப்படுத்துகின்றன.
பழைய கடன்கள்:
நீங்கள் வங்கியை பிற இடங்களிலோ அல்லது நிறுவனங்களிலோ ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று இருக்கலாம். அதற்கான நீங்கள் மாதம் ஒருதொகையை மாதத் தவணையாக கட்டலாம். அதனால், உங்களுக்குக் கடன் கொடுப்பவர் உங்கள் வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் வழங்குவதற்குத் தயங்கலாம்.
பெரிய கடன்தொகை:
உங்களின் சக்திக்கு மீறிய பெரிய தொகையை வீட்டுக் கடனாகப் பெறுவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படியே வீட்டுக் கடனுக்குப் பெரிய தொகையைப் பெறுவதாக இருந்தால், இரண்டு பேராக விண்ணப்பிப்பது சரியாக இருக்கும்.
எதிர்பார்க்கும் கடனுக்கான மாதத் தவணை உங்கள் மாத வருமானத்துடன் ஒப்பிடப்படும். அது அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புண்டு.
மேலும் வாசிக்க.. பிக்சட் டெசாபிட் திட்டத்தில் பட்டையை கிளப்பும் ஐசிஐசிஐ!
மோசமான கடன் மதிப்பெண்
வீட்டுக் கடன் பெறுவதற்குக் கடன் மதிப்பெண் (Credit Score) அவசியம். மூன்றிலிருந்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை, வங்கியில் உங்கள் கடன் மதிப்பெண்ணைத் தெரிந்துகொள்வது நல்லது. உங்களது கடன் மதிப்பெண் போதுமான அளவுக்கு இல்லையென்றால், உங்கள் வங்கியை அணுகி, நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்திவிடுவது அவசியம். வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் இதைச் செய்வது நல்லது.
தெரிந்துக் கொள்ளுங்கள்...எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு வழக்கும் அல்டிமேட் திட்டங்கள் என்னென்ன?