கடந்த சில நாள்களாக, 'ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா' (SBI) இலிருந்து பலருக்கு ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில், வங்கியில் உள்ள YONO கணக்கு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என்றும், மீண்டும் செயல்பட தங்கள் நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை விவரங்களை புதுப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இது போலியானது என எஸ்பிஐ தரப்பில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “எஸ்பிஐ பெயரில் ஒரு போலிச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதில் உண்மையில்லை. வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு மற்றும் ஆவணங்கள் தொடர்பான விவரங்களை யாருக்கும் மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர வேண்டாம்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும், எஸ்பிஐ ஒருபோதும் மெசேஜ் மூலம் தனிப்பட்ட விவரங்களைக் கேட்பதில்லை,” எனக் கூறியுள்ளது. இது தொடர்பான புகார்களை phishing@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம்.
எஸ்பிஐ யோனோ என்றால் என்ன?
யோனோ என்பது 'You Only Need One' என்பதன் சுருக்கமாகும், இது SBI ஆல் 2017 இல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும்.
இதன்மூலம், முன்பதிவு டிக்கெட்கள் (விமானம், ரயில், டாக்ஸி), ஆன்லைன் ஷாப்பிங், மருத்துவ பில் செலுத்துதல் போன்ற பல்வேறு நிதி மற்றும் பிற சேவைகளை அணுக பயனர்களுக்கு உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“