மெர்சல் திரைப்படம் போல, 'பத்மாவத்'தும் வசூலில் மெர்சலாக்குமா?

இந்திய திரையரங்கு வசூல் 325 கோடி ரூபாயை பத்மாவத் படம் தாண்டிவிட்டது. மற்ற நாடுகளின் வசூல் என பார்க்கையில், இது 159 கோடி ரூபாய் என்கிறார்கள்.

ஆர்.சந்ந்திரன்

தமிழில் வெளியான மெர்சல் திரைப்படத்துக்கு வாய்த்த அதே அதிர்ஷ்டம், தேசிய அளவில் பத்மாவத் திரைப்படத்துக்கும் கிட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுக்க கடும் சர்ச்சைகளுக்கு இடையே – சஞ்ஜய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியான பத்மாவத் திரைப்படத்தின் தற்போதைய வசூல் 485 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

பாலிவுட் ஹங்கம்மா என்ற வலைதளத் தகவல்படி, கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியான இந்த திரைப்படம், முதல் வார வசூலிலேயே நம்பிக்கை அளித்துள்ளதாக தெரிகிறது. பல மாநிலங்களில் இப்படத்தை வெளியிட எதிர்ப்பு இருந்ததால், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெளியாகி இருந்தாலும், இதுவரை இந்திய திரையரங்கு வசூல் மட்டுமே 325 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாம். இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளின் வசூல் என பார்க்கையில், இது 159 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக திரட்டியுள்ளது என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். இந்த படத்துக்கான ஆரம்பகட்ட எதிர்ப்பு தற்போது மெல்ல குறைந்து வருவதால், வரும் வாரத்தில் இதன் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

×Close
×Close