scorecardresearch

RD Scheme: போஸ்ட் ஆபீஸை விட கூடுதல் வட்டி தரும் வங்கிகள் இவை!

High interest rate RD: ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் பிக்ஸட் டெபாசிட்டுகளை போலவே RD கணக்குகளுக்கும் அதிக வட்டி வழங்குகிறது.

small finance bank RD

தொடர்ச்சியான வைப்பு (RD) என்பது இந்தியாவில் பலருக்கும் நன்கு அறியப்பட்ட சேமிப்பு-ஊக்குவிக்கும் திட்டமாகும். தொடர்ச்சியான வைப்புக் கணக்கில், வாடிக்கையாளர் தவணைகளில் பணம் செலுத்தலாம். மற்றும் முதிர்வுத் தொகையை முதிர்வு தேதியில் பெற முடியும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி போன்ற பல வங்கிகள் RD கணக்கைத் திறக்கும் வாய்ப்பை வழங்குகிறார்கள். இந்த வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களைத் தவிர, ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளிடமும் RD கணக்குகளை தொடங்க முடியும்.

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி வழங்குவதோடு ரெக்கரிங் டெபாசிட்டுக்கும் வழங்குகிறது. பெரும்பாலான ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 6 மாதங்கள் முதல் 10 வருடங்களுக்கான ஆர்.டி கணக்குகளை திறக்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம்.

உட்கார்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இது அதிகபட்சமாக 24 முதல் 36 மாதங்கள் வரையிலான ஆர்டி கணக்குகளுக்கு வட்டியாக 8% வழங்குகிறது.12, 15, 18, 21, மற்றும் 24 மாதங்களுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான ஆர்டி கணக்குகளுக்கு அதே 7.25% வட்டி வழங்குகிறது.

உட்கார்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 24 முதல் 36 மாதங்கள் வரையிலான ஆர்டி கணக்குகளுக்கு 8.50% வட்டி வழங்குகிறது.

6 மாதங்கள் வரை- 6.50%
9 மாதங்கள் – 6.50%
12 மாதங்கள் -7.25%
15 மாதங்கள் – 7.25%
18 மாதங்கள் -7.25%
21 மாதங்கள் -7.25%
21 மாதங்களுக்கு மேல் 24 மாதங்களுக்குள்-7.25%
24 முதல் 36 மாதங்கள் -8.00%
3 வருடங்களுக்கு மேல் 5 வருடங்கள் வரை -7.25%
5 வருடங்களுக்கு மேல் 10 வருடங்கள் வரை -7.25%

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இந்த வங்கி 36-60 மாதங்கள் வரையிலான RD கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75%வழங்குகிறது.

ஒரு மாதம் முதல் 6 மாதம் வரை- 4% வட்டி
6 மாதம் முதல் 12 மாதம் வரை -6%
12 மாதம் முதல் 36 மாதம் வரை -7%
36 மாதம் முதல் 60 மாதம் வரை-7.25%
60 மாதம் முதல் 120 மாதங்கள் வரை -6.50%

சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

5 வருட ஆர்டி கணக்குகளுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.75% வழங்குகிறது.

6 மாதங்கள் – 5.50%
9 மாதங்கள்- 6.00%
12 மாதங்கள் – 6.75%
15 மாதங்கள் -6.75%
18 மாதங்கள் -6.75%
21 மாதங்கள் -6.75%
24 மாதங்கள் – 6.75%
27 மாதங்கள் – 7.00%
30 மாதங்கள் – 7.00%
33 மாதங்கள் -7.00%
36 மாதங்கள் -7.00%
3 வருடங்களுக்கு மேல் 5 வருடங்களுக்குள் -7.10%
5 வருடங்கள் -7.25%
5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை – 6.50%

வட கிழக்கு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இந்த வங்கி அதிகபட்சமாக 2 வருட ஆர்டி கணக்குகளுக்கு 7.50% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 8% வழங்குகிறது.

3 மாதங்கள் – 4.25%
6 மாதங்கள் -4.50%
9 மாதங்கள் – 5.50%
ஒரு வருடம் – 5.50%
2 வருடம் -7.50%
3 வருடம் -7.00%
4 வருடம் -7.00%
5 வருடம் -6.50%
5 வருடங்களுக்கு மேல் 10 வருடங்கள் வரை- 6.50%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Recurring deposit rd interest rate for small finance bank detail