ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டம்: ஜியோ ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது யோகம்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 ஆவது பொதுக்குழு கூட்டத்தில் அம்பானி தனது குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2018 ஆண்டிற்கான பொதுக்குழுக் கூட்டம் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி  நேரலையில் உரையாற்றி வருகிறார்.

கடந்தாண்டு  நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில்  ஜியோ போன் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால்  ஜியோ ஃபோனை முதலில்  ரூ. 1500 கட்டி வாங்கிக் கொள்ளலாம் என்றும் 3 ஆண்டுகள் கழித்து இந்த தொகை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைப் போன்றே தற்போது நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் புதிய  அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புகள் உள்ளனவா? என்று வாடிக்கையாளர்கள்  ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41 ஆவது பொதுக்குழு கூட்டத்தில் அம்பானி தனது குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.

அதனை நேரலையில் காண

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு உயர்வை கண்டு வருகிறது.

அம்பானியின் புதிய அறிவிப்பை நேரலையில் காண

×Close
×Close