ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த டெலிகாம் நிறுவனத்தை கைப்பற்றி விரைவில் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கவுள்ளது.
இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த ரேடிசிஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஜியோ தொலைத் தொடர்பு சேவையில் 5ஜி இன்டர்நெட் வசதியை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.சுமார் 506 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனத்தின் பங்குகளை ஜியோ வாங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஓரேகானில் உள்ள ஹில்ஸ்போரோவில் உள்ள ரேடிசிஸ் நிறுவனத்தின் தலைமையகத்தில் 600 பேர் வரை வேலை பார்க்கின்றனர். அந்த நிறுவனத்தின் பொறியியல் குழு ஒன்றும் பெங்களூரில் உள்ளது. ராடிசிஸ் நிறுவனத்தை 7.5 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.510 கோடி) கொடுத்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வாங்க இருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை விரிவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராடிசிஸ் நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் மட்டுமின்றி தொழில்நுட்ப நிறுவனமாகவும் உருவெடுக்கும்.
அதன் பின்பு, பொதுமக்களுக்கும் எளிமையாக 5ஜி சேவை வழங்கவும் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.