தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மே மாதம், எந்த நிறுவனம், சிறந்த சேவையினை வழங்கியது என்று அறிவித்திருக்கிறது ட்ராய்.
மே மாதத்தில் ஜியோ நெட்வொர்க் 22.3Mbps என்ற வேகத்தில் டவுன்லோடு செய்யும் அளவிற்கு அதிவேகமான இணைய சேவையினை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளதாக ட்ராய் கூறியுள்ளது.
ஐடியா செல்லுலார் நெட்வொர்க் அதிவேகமான அப்லோடிங் இணைய சேவையினை வாடிக்கையாளர்களுக்கு மே மாதம் வழங்கியுள்ளது.
ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் ஏர்டெலை விட மிக அதிகம். ஏப்ரல் மாதத்தில் 9.3Mbps ஆக இருந்த ஏர்டெல்லின் டவுன்லோட் வேகம், மே மாதத்தில் 9.7Mbps ஆக உயர்ந்துள்ளது.
வோடஃபோன் நிறுவனத்தின் டவுன்லோடு வேகம் 6.7 Mbps மற்றும் ஐடியா செல்லுலாரின் டவுன்லோடு வேகம் 6.1 Mbpsஆக மே மாதத்தில் இருந்திருப்பதாக ட்ராய் அறிவித்திருக்கிறது.
அதிவேக அப்லோடிங் சேவையை தருவதில் ஐடியா செல்லுலார் 5.9Mbps அளித்து முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 5.3Mbps வேகமான சேவையைக் கொடுத்து வோடஃபோன் உள்ளது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் உள்ளது. ஜியோவின் அப்லோடிங் வேகம் 5.1Mbps மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் அப்லோடிங் வேகம் 3.8Mbpsமாகவும் உள்ளது.