Advertisment

ஜியோவின் அடுத்த அட்டாக்: ரூ. 251 க்கு 102 ஜிபி டேட்டா!

இந்த போட்டியையை முன்னிட்டு தான் ஜியோ கிரிக்கெட் ஆஃபர் என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Reliance Jio introduces 30 minutes free IUC talk time offer

4ஜி நெட்வொர்க் நிறுவனமான ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அறிவிப்பாக ரூ. 251 க்கு ரீசார்ஜ் செய்தால், 102 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Advertisment

டெலிகாம் சந்தையில், தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டு, மற்ற நிறுவனங்களுக்குய் கடுப்போட்டியாக மாறியுள்ள ஜியோ நிறுவனம் அடுத்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  கடந்த வாரம் தான் ஜியோவின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து 1 வருடம் இலவச சேவையை வழங்குவதாக அறிவித்து அனைவரையும்  திகைத்து வைத்தது.

தற்போது, மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜியோ நிறுவனம், ” ஜியோ கிரிக்கெட் பெளே அலாங்’ மற்றும் “ஜியோ தண் தானா லைவ்” என இரண்டு பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது.

இந்த போட்டியில், பங்குப்பெற்று  வெற்றி அடையும்  வாடிக்கையாளர்களுக்கு கார், வீடு, கிஃபுட் வவுச்சர்கள், பரிசுத் தொகை என ஏகப்பட்ட  பரிசுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.  இந்த  போட்டியையை முன்னிட்டு தான் ஜியோ கிரிக்கெட் ஆஃபர் என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த திட்டத்தில் படி, ரூ. 251 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 51 நாட்கள் செயல்படும் 102 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அத்துடன், மை ஜியோ ஆப் வாயிலாக நடைபெற உள்ள பரிசு திருவிழாவில் 11 மொழிகளில் வழங்கப்பட உள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக, ஷில்பா ஷிண்டே, அலி ஆஸ்கார், சுகந்த மிஸ்ரா, சுரேஷ் மேனன், பரேஷ் கணத்ரா, ஷிபானி டண்டேகர் மற்றும் அர்ச்சனா விஜய். கபில்தேவ் மற்றும் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்

Jio Recharge Plan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment