ஜியோவின் நம்பமுடியாத வளர்ச்சி: ஒரு ஆண்டிற்கு ரூ.7,128 கோடி வருவாய் !

வாடிக்கையாளர் மாதத்திற்கு குறைந்தது 716 நிமிடங்கள் ஆவது பேசுகின்றனர்.

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஜியோ, 2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ஜியோ நிறுவனம்,  மார்ச் 31, 2018 வரையில்,  ரூ.7,128 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக  தெரிவித்துள்ளது.  இது முந்தைய காலாண்டை விட 3.6% வளர்ச்சி மற்றும்  ரூ.510.44 கோடி லாபமும் ஆகும். மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ஜியோ இதுவரை  1.2% வளர்ச்சியை  பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் சந்தையில் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும், ஏர்டெல் நிறுவனம், ரூ.652.30 கோடி நஷ்டமடைந்துள்ளது.ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 18.66 கோடியை கடந்துள்ளது. மேலும்,  இந்த காலாண்டில்  2.65 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ கைப்பற்றியுய்ள்ளது. முந்தைய காலாண்டில் சுமார் 2.15 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம் வெளிட்டுள்ள இந்த  நிதிநிலை அறிக்கையில் சில முக்கியமான தகவல்களும் பகிரப்பட்டுள்ளனர்.  வயர்லெஸ் டேட்டா பயன்பாடு 506 கோடி ஜிபி ஆக இருக்கிறது. அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு வாடிக்கையாளர்  9.6 ஜிபி டேட்டாவை பயன்படுத்துக்கின்றனர்.

சராசரி வாய்ஸ் கால் பயன்பாடு நாள் ஒன்றிற்கு 37,218 கோடி நிமிடங்களாக இருக்கிறது. அதன்படி, வாடிக்கையாளர் மாதத்திற்கு குறைந்தது  716 நிமிடங்கள் ஆவது பேசுகின்றனர்.

ஜியோமியூசிக் மற்றும் சாவன் நிறுவனங்களின் ஒப்பந்த மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிக மதிப்பு கொண்டது என கூறப்பட்டிருந்தது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close