டெல்லி மற்றும் மும்பையில் அறிமுகமாகும் ஜியோ ஃபைபர்

ஏர்டெல், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், டாட்டா ஸ்கை, மற்றும் டிஷ் டிவி போன்ற நிறுவனங்களுக்கு புதிய சவாலாக இருக்கும் ஜியோ ஃபைபர்

Jio Fiber Broad Band
Jio Fiber Broad Band

ஜியோ,  இந்திய பிராட்பேண்ட் சேவைகளிலும் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்யப் போகிறது. இதனை செயல்படுத்த, முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், ஜியோ ஃபைபர் என்ற பெயரில் 2016ம் ஆண்டில் இருந்து சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த வருடத்தின் முடிவிற்குள் மும்பை மற்றும் டெல்லி போன்ற மிகப்பெரிய நகரங்களில் செயல்பாட்டிற்கு வரப் போகிறது இந்த பிராட்பேண்ட் சேவை. டெல்லி மற்றும் மும்பையினைத் தொடர்ந்து டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இந்த சேவையை அறிமுகப்படுத்த இருக்கிறது ஜியோ.

இந்த சேவையின் படி, பயனாளிகள் 90 நாட்களுக்கு, 100ஜிபியினை, 100MBPS என்ற வேகத்தில் டேட்டா வசதிகளை பெறலாம். ஆனால் இதனை வாங்குவதற்கு ஆரம்பத்திலேயே முன் தொகையாக ரூ.4,500ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினேஷன் (Optical Network Termination) மூலமாக இணையம், கேபிள் டிவி, லேண்ட்லைன், ஹோம் ஆட்டோமேசன், மற்றும் ஹோம் சர்வைலன்ஸ் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு முழுமையான பேக்கேஜ்ஜாக வரும் இந்த ஜியோஃபைபர் ரவுட்டர் கருவியின் மூலமாக ஏற்கனவே மக்கள் மத்தியில் இயங்கிவரும் ஏர்டெல், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் போன்ற பிராட்பேண்ட் சேவைகள் பாதிக்கப்படும். மேலும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களான டாட்டா ஸ்கை, டிஷ் டிவி போன்ற சேவைகளும் பாதிப்பிற்குள்ளாகும்.

இந்த ஜியோஃபைபரின் புகைப்படங்கள்

JioFi router image Exclusive
Jio Fiber Broad Band Router

 

ஏற்கனவே மொபைல் நெட்வொர்க் சேவையில் ரிலையன்ஸ் மிகப் பெரிய மாற்றத்தை இந்தியாவில் உருவாக்கி உள்ளது. மேலும் இது போன்ற சேவைகள் வரும் போது, பெரிய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். இந்த ஜியோஃபைபர் பற்றிய அதிகாரப் பூர்வ் அறிவிப்பினை முகேஷ் அம்பானி வரும் ஜூலை 5ம் தேதி அறிவிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் எதிர்பார்க்கலாம்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance jio fiber launch first images of routers leaked click to know data plans price launch date

Next Story
ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் நடத்திய இந்திய நிறுவனங்கள்Messenger needs Facebook account to sign up
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X