ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ’ஃபுட்பால் ஆஃபர்’ மூலம் டாப் ஸ்மார்ஃபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெலிகாம் மார்கெட்டில் முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸின் ஜியோ நாளுக்கு நாள் புதிய புதிய ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கேஸ்பேக் சலுகையுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்கள், ரீசாஜ் திட்டங்களின் கீழ் கிவுட் வவுச்சர்கள், ரீசார்ஜ் கூப்பன்கள் என புதிய அம்சங்களை முதன் முதலில் அறிவித்த பெருமை ஜியோவையே சாரும்.
ஜியோவைத் தொடர்ந்து, மற்ற நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல் போன்றவையும் வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக ஏர்டெல்- ஜியோ நிறுவனங்கள் டெலிகாம் சந்தையில் நேரடியாக களத்தில் போட்டிப்போட்டுக் கொண்டனர். இந்நிலையில், தற்போது ஜியோ நிறுவனம் ’ஃபுட்பால் ஆஃபர்’என்ற பெயரில் குறிப்பிட்ட சில ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ரூ.2,200 வரை கேஸ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது.
சாம்சங், எல்.ஜி., நோக்கியா, மோட்டோரோலா, சியோமி, பிளாக்பெரி, அசுஸ், ஹூவாய், பானசோனிக், ஸ்வைப், கோமியோ, செல்கான், சியோக்ஸ், இன்டெக்ஸ், ஆல்காடெல், மைக்ரோமேக்ஸ், 10.ஆர், லைஃப், ஜிவி, சென், ஐஊமி மற்றும் சென்ட்ரிக் நிறுவனங்களின் தேர்வு செய்யப்பட்ட 22 நிறுவனங்களில் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேஸ்பேக் தொகை வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ எண்களுக்கு தொடர்ச்சியான ரீசார்ஜ் செய்வோருக்கு கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31, 2018-ம் தேதிக்குள் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்ததும் ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்கள் வடிவில் மைஜியோ செயலியில் கிரெடிட் செய்யப்படும். இதனை மை ஜியோ மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும்போது பயன்படுத்தி ரூ.50 சலுகை பெறலாம்.