ஜியோ அதிரடி: ரூ. 399 ரீசார்ஜ் பேக் இனி வெறும் ரூ. 299 மட்டுமே!!

இந்த சலுகை ஜூன் 1 முதல் 15 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர,ரூ. 399 ரீசார்ஜ் திட்டத்தை விலை குறைத்து ரூ. 299 க்கு அறிவித்துள்ளது.

டெலிகாம் மார்க்கெட்டில் தொடர்ந்து புரட்சியை செய்து வரும் ஜியோ நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட்பெயிட் சலுகையை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘ஹாலிடே ஹங்காமா ஆஃபர் ’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, ரூ. 399 க்கு ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ரூ. 100 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5GB டேட்டா, அன்லிமிடட் வாய்ஸ் கால் வழங்கப்பட்டது. 84 நாட்கள் வேலிடிட்ட் கொண்ட இந்த ரீசார்ஜ் திட்டத்தை இனி ரூ.299க்கு பெற முடியும்.

மை ஜியோ அப்ளிகேஷன் மூலம் ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், பணம் செலுத்தும் போது, கண்டிப்பாக, மை ஜியோ அப்ளிகேஷனுக்கு உள்ளேயே இருக்கும் Phone Pe மூலம் பணம் செலுத்தும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். Phone Pe மூலம் ரூ.349 செலுத்திவிட்டால் இன்னும் 50 ரூபாய் கேஷ்பேக் முறையில் Phone Pe கணக்கிற்கு வந்துவிடும். மை ஜியோ அப்ளிகேஷனில் ரூ.50 கழிவும் Phone Pe கணக்கில் ரூ.50 கேஷ்பேக்கும் சேர்த்து 100 ரூபாய் சலுகையைப் பெற்று, ரூ.399க்கு ரீசார்ஜ் செய்வதன் பலனை ரூ.299க்கு பெறலாம்.

இந்த சலுகை ஜூன் 1 முதல் 15 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close