ஜியோவின் அதிரடியான கேஷ்பேக் ஆஃபர்!

கேஷ்பேக் ஆஃபர் திட்டம் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மட்டுமே செயல்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இருமடங்கு கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில், முன்னணி நிறுவனமாக திகழும் ரிலையன்ஸில் ஜியோ நிறுவனம், ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அவ்வப்போது, கேஷ்பேக் ஆஃபர்களை அறிவித்து வருகிறது. இருமடங்கு, மும்மடங்கு வரையிலான இந்த கேஷ்பேக் ஆஃபரில் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் கூப்பன்கள், கிஃப்ட் வவுசர்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், ஜியோ நிறுவனம் தற்போது இருமடங்கு கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ 398 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கயாளர்களுக்கு இருமடங்கு கேஷ்பேக் ஆஃபரை அளிக்கிறது. உதாரணத்திற்கு ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.799 மதிப்பிலான கேஷ்பேக்கை பல்வேறு வகையில் பிரித்து வழங்குகிறது. இந்த கேஷ்பேக் ஆஃபர் திட்டம் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மட்டுமே செயல்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவின் கேஸ்பேக் விபரங்கள்:

* ரூ. 400 கேஸ்பேக்காக 50 ரூ மதிப்பிலான 8 ரீசார்ஜ் கூப்பன்கள்

* மைஜியோ ஆப், ஜியோ டிஜிட்டல், ஜியோ.காம் ஆகியவற்றில் முதல் 5 ரீசார்ஜ்களுக்கு வாலெட்டில் கேஷ்பேக் அளிக்கப்படும்.

*அமேசான் பெயில் ரூ. 50 மதிப்பிலான கேஸ்பேக்

*பேட்டியம் கொண்டு ரீசார்ஜ் செய்வோர்க்கு ரூ. 50 கேஷ்பேக்

*அமேசான் பெயில் கேஷ்பேக்.

*மொபைல் வாலெட்டில் ரீசார்ஜ் செய்வோர்க்கு ரூ.399 கேஷ்பேக்

×Close
×Close