ஜியோவின் அடுத்த அதிரடி:  வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்! 

எவ்வித வீடியோ மற்றும் இதர சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜியோ நிறுவனம்  8ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் துவங்கிய உடனே, ஜியோ நிறுவனம்  கவர்ச்சிக்கரமான புதிய  ஆஃபர்களை அறிவிக்க தொடங்கியது. குறிப்பாக ரூ. 251 ரீசார்ஜ் திட்டத்தில்  தினமும் 4ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

51 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில் தினமும் 4ஜிபி டேட்டா என்ற செய்தி வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்திருந்தது. அதனைத்தொடர்ந்து, ஜியோ நிறுவன, இதே ரூ. 251 திட்டத்தில் கிரிக்கெட் டீசர் என்னும் திட்டத்தை அறிவித்து அதில் கூடுதலாக  8 ஜிபி  டேட்டாவை வழங்கியது.

இந்நிலையில், தற்போதும் மீண்டும் ஒரு புதிய சலுகையை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, ரூ. 101 ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதலாக 8ஜிபி டேட்டா வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதாவது, நாளுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மே 25 முதல் மே 29 வரை 5 நாட்களுக்கு 8 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோவின் மற்றொரு அறிவிப்பு

இது ஆட்-ஆன் சலுகை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆட்-ஆன் சலுகை என்பதால் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் எதுவும் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில்  வாடிக்கையாளர்கள் இந்த டேட்டாவை கொண்டு எவ்வித வீடியோ மற்றும் இதர சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

 

×Close
×Close