ஜியோவின் பிரைம் திட்டம் நாளையுடன் நிறைவு: அடுத்தது என்ன?.. அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்!!

பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோவின் பிரைம் உறுப்பினர் திட்டம் நாளையுடன்(31.3.18) பெரும்பாலான யூசர்களுக்கு முடிவடையும் நிலையில், அடுத்த அறிவிப்பு குறித்த ஆர்வம் பலருக்கும் அதிகரித்துள்ளது.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. ஜியோவின் வருகைக்கு பின்னர் பல முன்னணி நிறுவனங்களும் தோல்வியை தழுவின.

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர், குறைந்த அளவில் அதிக டேட்டா, கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுளவில் கவர்ந்தது. கடந்த செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு இலவச சேவையை 3 மாதங்களுக்கு வழங்கிய ஜியோ நிறுவனம், 2017 ஆம் ஆண்டில் ’ஹேப்பி நியூ இயர் ஆஃபர்’ என கூடுதலாக 3 மாதங்கள் முற்றிலும் இலவச சேவை வழங்குவதாக மீண்டும் அறிவித்தது.

அதன் பின்பு, ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளையுடன், பெரும்பாலான ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களின் ரூ.99 வருடாந்திர உறுப்பினர் கட்டணம் நிறைவடைவதனால், விரைவில் ஜியோ நிறுவனம் அடுத்த ரீசார்ஜ் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது. இது தொடர்பான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தொகை செலுத்தி உறுப்பினர் திட்டத்தை புதுபிக்க  வேண்டுமா? அல்லது  ரீசார் தொகை செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

 

×Close
×Close