ஜியோ ஹாட்ஸ்பாட் வாங்கினால் ரூ. 2200 கேஷ்பேக் ஆஃபர்!

ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு அதிரடியான கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது.

டெலிகாம்  சந்தையில் புதியதொரு புரட்சியை செய்து வரும் ஜியோ நிறுவனம் தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அந்த வகையில் பழைய டாங்கிள்களை கொடுத்து புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு புதிய வைபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதாவது, ரூ.2200 மதிப்புடைய கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய மொத்தம் 44 வவுச்சர்களாக வழங்கப்படும், இவற்றை ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் செய்ய மட்டும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோஃபை ரவுட்டர் வாடிக்கையாளர்களிடக்  அதிக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை எப்படி செயல்படுத்த்ஜ வேண்டும் என்பதையும் ஜியோ நிறுவனம்  தெளிவாக விளக்கியுள்ளது.

1. முதலில் ரூ.999 செலுத்தி ஜியோஃபை போர்டபிள் வைபை ரவுட்டரை வாங்க வேண்டும்.

2. பின்பு, ரூ.99 மற்றும் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்

3. உங்களின் பழைய ஜியோ அல்லாத டாங்கிளை ஏதேனும் ஜியோஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் வழங்க வேண்டும்

 

4. அதன் பின்பு, பழைய ஜியோ அல்லாத டாங்கிள் அல்லது மோடெமின் சீரியல் நம்பரை வழங்கி, புதிய ஜியோஃபை நம்பரை பெற வேண்டும்

5. மறுநாளே  உங்களுக்கான கேஷ்பேக் உடனடியாக மைஜியோ கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close