ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜியோ ஜீரோ டச் ( Jio Zero-Touch) என்ற பெயரில் போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெலிகாம் சந்தையில் நம்ப முடியாத புரட்சிகளை செய்து வரும், ஜியோ நிறுவனம், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கான ஜியோ ஜீரோ டச் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் மே 15 ஆம் தேதி புகழத்திற்கு வரும் இந்த திட்டம் குறித்த முழு விபரத்தையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரூ. 199 கட்டணம் நிர்ணியம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரீசாஜ் செய்துக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், மொத்தம் 25 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 இலவச எஸ் எம் எஸ்க்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் கூடுதல் சலுகையாக ஜியோ டிவி, ஜியோ மியூசிக், ஜியோ மூவிஸ் , மேலும் பல்வேறு ஜியோ செயலிகளை இலவசமாக வழங்குகின்றது. இதில், தேசிய ரோமிங் கால்களும் இலவசம்.
சர்வதேச அழைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்தில் வழங்க வேண்டும் என்று, இந்த திட்டத்தில் மற்றொரு புதிய வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு நிமிடத்திற்கு 50 பைசா கட்டணம்.வங்காளம், சீனா, பிரான்ஸ், இத்தாலி, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு நிமிடத்திற்கு ரூ. 2 கட்டணம் என்று நிர்ணியித்துள்ளது.