Reliance Jio Per Day Data Plan: என்னடா அதுக்குள்ளேயும் 1 ஜிபி இன்டர்நெட் தீர்ந்துருச்சே, இன்னும் வேலை முடியலயே என்று வருத்தப்படுபவர்களா நீங்க? உங்களுக்காகவே, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினசரி 3 ஜிபி முதல் 5 ஜிபி வரையிலான இன்டர்நெட் சேவையை வழங்க முன்வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் தினசரி 1.5 ஜிபி இன்டர்நெட் சேவை வழங்கிய முதல் தொலைதொடர்பு நிறுவனம் ஆகும். இதன்வரவால், ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பெரும்சரிவை சந்தித்தன.
மாதத்திற்கு 1 ஜிபி இன்டர்நெட் சேவையை பயன்படுத்திவந்த நாம், தற்போது தினசரி 1.5 ஜிபி இன்டர்நெட்டை பயன்படுத்துகிறோம் என்றால், அது ஜியோவின் வரவிற்கு பிறகுதான் என்பதை யாராலும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது
தற்போது, தினசரி 1.5 ஜிபி இன்டர்நெட் கூட போதவில்லை என்ற நிலைக்கும் நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலையிலும், ஆபந்பாந்தவனாக ஜியோ நிறுவனமே நமக்கு கைகொடுக்கிறது.
Reliance Jio 3GB per day data plan : 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.299 மதிப்பிலான இந்த பிளானில் தினசரி 3 ஜிபி இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது, அளவில்லா அழைப்புகள் மற்றும் பேசும் வசதி, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன. ஜியோ ஆப்களான ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.
Reliance Jio 4GB per day data plan: 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.509 மதிப்பிலான இந்த பிளானில் தினசரி 4 ஜிபி இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது, அளவில்லா அழைப்புகள் மற்றும் பேசும் வசதி, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன. ஜியோ ஆப்களான ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.
Reliance Jio 5GB per day data plan: 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.799 மதிப்பிலான இந்த பிளானில் தினசரி 5 ஜிபி இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது, அளவில்லா அழைப்புகள் மற்றும் பேசும் வசதி, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகின்றன. ஜியோ ஆப்களான ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன