50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கேம்பா கோலா பானத்தை மீண்டும் சந்தைப்படுத்த உள்ளதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிறுவனத்துக்கு சொந்தமான ரிலையன்ஸ் கன்சியூமர்ஸ் புராடெக்ட் லிமிடெட் நிறுவனம் 50 ஆண்டுகள் பழமையான ப்ராண்டான கேலா கோலாவை அறிமுகப்படுத்த உள்ளது.
அந்த வகையில் முதல் கட்டமாக கேம்பா கோலா மற்றும் கேம்பா ஆரஞ்ச் ஆகிய ப்ளேவர்களில் பான வகைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
முன்னதாக, ரிலையன்ஸ், குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்ட காம்பா என்ற பிராண்டின் உரிமையாளரான Sosyo Hajoori Beverages (SHBPL) இல் 50 சதவீத பங்குகளை வாங்கியது.
இது குறித்து ஆர்சிபிஎல் செய்தித் தொடர்பாளர், “கேம்பா பான பிரிவில் ஒரு புதிய உற்சாகத்தைத் தூண்டுவதற்கும், தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதாக நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
தொடர்ந்து, “இந்தியர்களின் மனம் கவர்ந்த இந்தப் பானம் 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது” என்றார். இந்தப் பானங்கள் முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானாவில் விற்பனையை தொடங்க உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/