1,200 கோடி கடன் – அனில் அம்பானியை நிம்மதி பெருமூச்சு விட வைத்த உத்தரவு

2018ம் ஆண்டு ஜனவரியில், எஸ்பிஐ அனில் அம்பானியின் தனிப்பட்ட உத்தரவாதத்தை ரத்து செய்தது

By: August 27, 2020, 4:30:59 PM

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தின், ரிலையன்ஸ் டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கு எஸ்பிஐ கடன் வசதியை நீட்டித்தது. இந்த கடன் வசதியின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அண்ட் ரிலையன்ஸ் டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 565 கோடி மற்றும் ரூ .635 கோடி ஆகிய இரண்டு கடன்களை எஸ்பிஐ 2016ம் ஆண்டு ஆகஸ்டில் வழங்கியது. ஆக மொத்தம் சுமார், ரூ.1200 கோடி. அனில் அம்பானி இந்த கடன்களுக்கு வங்கியிடம், 160 மில்லியன் டாலருக்கு தனிப்பட்ட உத்தரவாதம் (personal guarantees) அளித்தார்.

ஆனால், உத்தரவாதப்படி, 2017ம் ஆண்டு ஜனவரியில், ஆர்.காம் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் கடனை திரும்ப செலுத்தாமல், வராக் கடன் என மாற்றப்பட்டது. இதையடுத்து, எஸ்பிஐ பல முயற்சிகள் எடுத்தும், அம்பானி நிறுவனங்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை. கேரண்டி கொடுத்தீர்களே, பணத்திற்கு என்ன வழி என எஸ்பிஐ கேட்டும், அனில் அம்பானி உரிய பதிலை அளிக்கவில்லை.

ரூ. 60 க்கு எஸ்பிஐ -யில் கிடைக்கும் சூப்பரான வசதி!

இதையடுத்து 2018ம் ஆண்டு ஜனவரியில், எஸ்பிஐ அனில் அம்பானியின் தனிப்பட்ட உத்தரவாதத்தை ரத்து செய்தது. இது தொடர்பாக எஸ்பிஐ மும்பையிலுள்ள தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (ஆர்.காம்) பெற்ற கடனுக்கு எதிராக அவர் அளித்த தனிப்பட்ட உத்தரவாதம் படி, திரும்ப கடனை செலுத்த முடியாமல் தவித்த அனில் அம்பானிக்கு எதிரான Insolvency & Bankruptcy Code (IBC) நடவடிக்கைகளை டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும், தனிப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்வதிலிருந்தும் மாற்றுவதிலிருந்தும் அம்பானிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Relief anil ambani delhi hc ibc proceedings1200 crore loan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X