Advertisment

மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 1 சதவிகிதமாக குறைப்பு!

லாட்டரி சீட்டுகள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

author-image
WebDesk
Feb 24, 2019 18:20 IST
Relief for home buyers as GST Council announces rate cut for real estate - மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 1 சதவிகிதமாக குறைப்பு

Relief for home buyers as GST Council announces rate cut for real estate - மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 1 சதவிகிதமாக குறைப்பு

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 33-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கவுன்சில் கூட்டத்தில் கட்டும்போதே வாங்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 8%-ல் இருந்து 1% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஸ்டி குறைப்பால் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலை குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி குறைப்பு, வீடு வாங்குபவர்களுக்கு நிச்சயம் பெரும் பயனளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த வரிச்சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லாட்டரி சீட்டுகள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. லாட்டரி சீட்டு விவகாரம் குறித்த ஆலோசனை நடத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

#Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment