இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் வீடு வாங்குபவர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து பாஸ்வாலா யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
Advertisment
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.5% ஆக நிர்ணயித்துள்ளது. முன்னதாக ஜனவரியில் 6.5%, பிப்ரவரியில் 6.25% மற்றும் பின்னர் 6% ஆக குறைக்கப்பட்டது.
ரெப்போ வட்டி விகிதம், வங்கிகள் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதங்களை பாதிக்கிறது. ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது, வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் கடன்கள் மலிவானதாக மாறும்.
கடன்களுக்கான வட்டி விகிதம் மாறுபடும் பட்சத்தில், ரெப்போ வட்டி விகிதம் குறைவதால் கடன் வாங்கியவர்களுக்கு நேரடி பலன் கிடைக்கும். உதாரணமாக, ஒருவர் 8.5% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வைத்திருந்தால், ரெப்போ விகிதம் 1% குறைந்தால், அவரது வட்டி விகிதம் 7.5% ஆக குறைய வாய்ப்புள்ளது.
Advertisment
Advertisements
ரெப்போ வட்டி விகிதம் குறைவதால், தனிநபர் கடன் அல்லது வீட்டுக் கடன் போன்ற புதிய கடன்களை வாங்குபவர்களுக்கு வட்டிச் சுமை குறையும். ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வீடு வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஏனென்றால், இது இ.எம்.ஐ தொகையை குறைக்க வழிவகுக்கும்.
இதனால் வீடு வாங்குவது இன்னும் எளிதாகும். குறிப்பாக நிலுவையில் உள்ள கடன்களை வைத்திருப்பவர்கள் மற்றும் மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள், வட்டி குறைப்பின் மூலம் பயனடைவார்கள்.