தொடர்ந்து நான்காவது முறையாக இந்திய ரிசர்வ் வங்கி , முக்கிய வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
பாலிசி ரெப்போ விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் குறைந்ததின் மூலம் ரெப்போ விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாகக் குறைந்துள்ளது.
முன்னர் அறிவித்த 3 கொள்கை அறிவிப்புகளிலும், ரிசர்வ் வங்கி ரெப்போ வீதத்தை தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி தனது 3வது இருமாததிற்க்கான மானிடரி பாலிசி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 5.15 சதவீதமாக திருத்தியுள்ளது.
மேலும்,நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை 7 சதவீதத்திலிருந்து 6.9 ஆக குறைத்துள்ளது.
பணவீக்கம் தொடர்பான தகவல்கள்:
பணவீக்கக் கட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி , அது தனது இலக்குக்குள் இருப்பதாகக் கூறியுள்ளது. . மேலும், சிபிஐ சில்லறை பணவீக்கம் FY2019-20 முதல் பாதியில் 3.1 சதவீதமாகவும், FY2019-20 இரண்டாம் பாதியில் 3.5-3.7 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.
கடந்த, ஜூன் மனிடரி பாலிசி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் இருந்து உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துவிட்டன என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.முக்கியமாக வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களில் பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமடைந்துள்ளன என்று கூறும் ரிசர்வ் வங்கி, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார வளர்ச்சிகள் சொல்லும்படி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
நோட் பண்ணிக்கோங்க! இனி மொபைல் இல்லாமல் கனரா வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்க முடியாது!
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு என்ன லாபம் :
ரெப்போ விகிதம் குறைவானால் நாம் வங்கியிலிருந்து இனி கடன் வாங்கும்போது வட்டி விகிதம் குறையும். ரிசர்வ் வங்கி ரெப்போ வை குறைக்கும் போதெல்லாம் உங்களது வங்கி லெண்டிங் விகிதத்தைக் குறைக்க வேண்டும். ஆனால் , நமது வங்கிகள் அவ்வாறு செய்வதில்லை என்பதே இயல்பான உண்மை. மேலும், fixed deposit-லிருந்து வருமானம் பெரும் மக்களுக்கு இந்த ரெப்போ குறைப்பு ஒரு பலத்த அடியாய் இருக்கும்.