Rs 1000 return news (October 2023): 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஒரு அறிக்கை ஒன்று கூறுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய திட்டம் எதையும் கருத்தில் கொள்ளவில்லை என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ஏஎன்ஐ (ANI) இதனை தெரிவித்துள்ளது.
அதில், "ரூ. 1000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கவில்லை" என்று கூறியுள்ளது. பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் 1000 ரூபாய் நோட்டுகளும் 2016ல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. புதிய ரூ.500 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், ரூ.1000 பழைய நோட்டுகள் மீண்டும் வரும் என்ற வதந்திகள் பரவின. இதற்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“